பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்களைப் பிரித்து வைக்கும் மனிதத் தன்மை இல்லாத சுவர்களை இடித்து நொறுக்கி மகிழ்வார்கள் எம் நாட்டு மக்கள். பெரும் திரளான எம் மக்கள் மனித மாண்புக்குக் கொடிய இழுக்கு ஆக விளங்கும் போக்கைப் புறமுதுகிடச் செய்வார்கள்.

இந்தப் போக்கானது சிலரை எஜமானர்கள் என்றும் மற்றவர்களை அடிமைகள் எனவும் விவரிக்கிறது; பிறரை கொள்ளை அடிப்பதன் மூலமே தாம் உயிர்வாழ முடியும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரையும் மாற்றிவிடுகிறது.

நம் அனைவருக்கும் பொதுவான இந்தப் பரிசு இறுதியில் வெற்றி பெற இருக்கிற மகிழ்ச்சிகரமான அமைதி நிலைமையினால் அளவிடப்படும் - அளவிடப் பெற வேண்டும், கறுப்பர்களையும் வெள்ளையரையும் ஒரே மனித இனமாக இணைக்கப் போகிற பொதுவான ஜன சமுதாயம், நாம் எல்லோரும் சொர்க்கத்தின் குழந்தைகள் போல வாழ்வோம் என்று பரஸ்பரம் கூறி மகிழும்.




வல்லிக்கண்ணன் • 51