பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1975ல் லண்டன் யுனிவர்சிட்டியின் மாணவசங்கத்தின் கவுரவ ஆயுள் உறுப்பினராக மண்டேலா ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

மாசேரு நகரின் லிசாதோ யுனிவர்சிட்டி மண்டேலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்துத் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது.

1980 ஆம் ஆண்டில், ஜவாகர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, புது டில்லியில் ஜவாகர்லால் நேரு விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. சர்வதேசப் பிரச்னைகளை உணர்ந்து உரிய முறையில் தொண்டாற்றுகிறவரைப் பெருமைப்படுத்துவதற்கான விருது அது.

ஆண்டு தோறும், உலகம் நெடுகிலும், இவ்வாறு மண்டேலாவைக் கவுரவித்துப் பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டவாறிருந்தன.

1981ல் இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரின் சுதந்திர சாசனம் மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது. அதற்கான பத்திரத்தை, மண்டேலா சார்பில், நைஜீரியாவின் துணைத்தலைவர் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் உள்ள வட்டாரத்தின் ரோடுக்கு மண்டேலாவின் பெயர் சூட்டப்பெற்றது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டேலாவை விடுவிக்கக் கோரிப் பதினேழாயிரம் மக்கள் கையெழுத்திட்ட விண்ணப்பம், பாரிஸ் நகரில் உள்ள தென் ஆப்பிரிக்கத் தூதர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

மனித உரிமைகள் சம்பந்தமாகப் பாடுபடுகிறவருக்கு என்று நிறுவப்பெற்ற டாக்டர் புரூனோ கிரீஸ்கி பரிசு, ஆஸ்திரியா நாட்டின் வீயன்னா நகரில் மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

1982இல், லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பள்ளிக்கூடத்தின் மாணவர் சங்கத்தின்


58 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா