பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைத்தட்டை வெளியிட்டார்கள். அது மக்களின் பேராதரவைப் பெற்றது.

லண்டன் நகரில், ஹேக்னி கவுன்சில், ஒரு வீட்டு வரிசைக்கு ‘நெல்சன் மண்டேலா பிளாக்’ என்று பெயரிட்டது.

கியூபாவில், அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோ, ப்ளாயா கிரான் விருதை மண்டேலாவுக்கு அளித்தார்.

பிரிட்டனில் உள்ள தேசிய மற்றும் லோக்கல் கவர்ன்மெண்ட் ஆபீசர்களின் சங்கம் அவரைத் தங்கள் சங்கத்தின் கெளரவ உறுப்பினராக ஏற்றுக் கொண்டது.

லண்டன் மாநகரின் ஹாரிங்கே பரோ கவுன்சில் அங்கு கட்டப் பெற்ற வீட்டு வசதிக் கட்டங்களுக்கு நெல்சன் மண்டேலா பெயரைச் சூட்டிப் பெருமை தேடிக் கொண்டது.

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில், நூற்று முப்பத்தைந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தார்கள். அயல் நாடுகளில் செயல் கமிட்டியின் சபையினர் அதை உற்சாகமாக வரவேற்றார்கள். செனட் சபையும் அதை அங்கீகரித்தது.

ஆப்பிரிக்காவில் உள்ள நெதர்டுயிட்சி ஜெரிபார்மீயர் டெகெர்க் எனும் அமைப்பு நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காகக் குரல் எழுப்பியது.

அயர்லாந்தில் டப்ளின் நகரின் மெரியான் சதுக்கம் என்கிற முக்கிய இடத்தில் மண்டேலாவுக்கு ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.

மண்டேலாவும் மற்றுமுள்ள தென் ஆப்பிரிக்க அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐம்பதினாயிரம் சர்வ தேச மக்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை பிஷப் ட்ரெவோர் ஹடில்ஸ்டன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரிடம் அளித்தார்.


வல்லிக்கண்ணன் • 63