பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில், காங்கிரஸ் கட்சியின் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது.

கனடா நாட்டின் மிக உயர்ந்த விருது ஆன ‘ஆர்டர் ஆஃப் கனடா’ என்பது சூட்டப் பெற்றது.

ஜனநாயகம், மனித உரிமைகள் சுதந்திரம் ஆகியவற்றுக்காக அவர் ஆற்றியுள்ள பணியை அங்கீகரிக்கும் விதத்தில், ஆப்பிரிக்காவின் ‘சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஸ்போர்ட்’ எனும் அமைப்பு மண்டேலாவுக்குச் சிறப்பு விருது வழங்கியது.

1999 ஆம் வருடம், ஜெர்மனியில், பேடன் பேடன் நகரின் சிறப்பு விருதினைப் பெற்றார்.

பிரிட்டோரியாவில் சமாதான ஒருமைப்பாட்டிற்கான விசேஷ விருது வழங்கப்பட்டது.

நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாம் நகரின் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றார்.

நெதர்லாந்தில், லெய்டன் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

டர்பனில், டர்பன் நகரக் குடிஉரிமை பெற்றார்.

மாஸ்கோ நகரில், ‘ரஷிய அகாடமி ஆஃப் சயின்ஸஸ்’ அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கேப் டவுணில், உக்ரேனின் மிக உயர்ந்த விருது ஆன ‘தி ஆர்டர் ஆஃப் பிரின்ஸ் யாரோஸ்லாவ் தி ஒய்ஸ்’ அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில், கான்பெர்ராவில் கெளரவ ‘கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்ட்ரேலியா’ என்ற சிறப்பினை மண்டேலா பெற்றார்.

ஜோகன்னஸ்பர்க்கில் ‘ஜெஸ்ஸி ஒவன்ஸ் குளோபல் அவார்ட்’ விருது வழங்கப்பட்டது.


வல்லிக்கண்ணன் • 77