பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆப்பிரிக்க மறுமலர்ச்சிக்கழகம் என்ற அமைப்பின் உயரிய கெளரவிப்பை அவர் அடைந்தார்.

காபரோன் நாட்டின் பாட்ஸ்வானா யுனிவர்சிட்டியின் கெளரவ சட்ட டாக்டர் பட்டம் கிடைக்கப் பெற்றார்.

குறிப்பிடத்தகுந்த பொதுநல சேவை புரிந்ததற்கான பேக்கர் இன்ஸ்டிட்யூட் என்ரான் பரிசு, ஹல்ஸ்டன் நகரில் உள்ள ரைஸ் யுனிவர்சிட்டியால் வழங்கப்பட்டது.

லைடன்பெர்கில், லைடன்பெர்க் நகர உரிமை அவருக்கு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜான் ஹோவார்ட், ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்ட்ரேலியா’ விருதை அவருக்கு அளித்தார். இவ் விருது பிரிடோரியாவில் அவருக்கு அளிக்கப்பட்டது.

மனித வர்க்கத்துக்கு மகத்தன சேவை புரிந்துள்ள மதம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘டெம்பிள் ஆஃப் அண்டர்ஸ்டேண்டிங் அவார்ட்’, கேப் டவுணில், அவருக்கு வழங்கப்பட்டது.

கேப் டவுணில் கூடிய உலக மதங்களின் பார்லிமெண்டில், காந்தி-கிங் விருது, உலக அகிம்சை இயக்கத்தினரால் அளிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் சீமான்கள் அங்கம் வகிக்கும் ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ சபை ‘க்வீன்ஸ் கவுன்சில்’ எனும் சிறப்பினை அவருக்குச் செய்து மகிழ்ந்தது.

ஸேண்ட்டன் சிறப்புத் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

லண்டனில், எத்னிக் மல்டிகல்ச்சுரல் மீடியா விருது அளிக்கப்பட்டது.

உலக மெதாடிஸ்ட் சபையினரின் சமாதானப் பரிசு லண்டன் நகரில் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.


78 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா