பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டென்னஸ்சி, மெம்பிஸ் நகரில், சர்வதேசச் சுதந்திரப் பரிசு தரப்பட்டது.

2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் புதுடில்லியில் சர்வதேசக் காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

லீட்ஸ் நகரின் கெளரவ சுதந்திர பிரஜை ஆக அங்கீகரிக்கப் பட்டார்.

கேம்பிரிட்ஜில், மேக்டலின் காலேஜில் கெளரவ உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

அவரது வீரத்தைப் போற்றும் விதத்தில் ராஜா ஷாகா விருது முதல் முறையாக மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

கனடா நாட்டில் டோரன்டோவில் உள்ள பார்க் பப்ளிக் ஸ்கூல் பெயர் மண்டேலா பார்க் பப்ளிக் ஸ்கூல் என்று புதுப்பிக்கப்பட்டது.

கனடாவில், டோரன்டோவின் ரையர்சன் யுனிவர்சிட்டி கெளரவ சட்ட டாக்டர் பட்டம் அளித்தது.

கனடா நாட்டின் கெளரவக் குடி உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.

ஃபிரீ ஸ்டேட் யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.

டெக்னிக்கான் ஃபிரிஸ்டேட் தொழிற் கல்விக்கான கெளரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியது.

ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள தென் ஆப்பிரிக்க மனித உரிமை கமிஷன் அமைப்பு, மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஆயுள்காலச் சாதனைக்குரிய விருதை அளித்தது.

2002-இல், தென் ஆப்பிரிக்காவில், கிரகாம்ஸ்டவுனில் உள்ள ரோட்ஸ் யுனிவர்சிட்டி, கெளரவ சட்ட டாக்டர் பட்டம் தந்தது.

தென் ஆப்பிரிக்காவில், கனா யுனிவர்சிட்டி கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது.


வல்லிக்கண்ணன் • 79