பக்கம்:நெற்றிக்கண்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நெற்றிக் கண்

திரும்பிவிடலாமென்று நினைக்கிறேன். இரண்டு மூன்று வரு, டப் படிப்பைச் சிரமப்பட்டுத் தள்ளிய பின் கடைசிச் சமயத். தில் இப்படி ஒரு சோதனை வருகிறதே என்று எண்ணும் போது படிப்பை நிறுத்திவிட்டுத் திரும்பவும் தயக்கமாயிருக் கிறது. துன்பம் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் தான் உங்க. ளுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை நான் படிக்க நேர்ந்தது. அதைப் படித்து முடித்ததுமே இந்த நிலையில் நான் அறிவுரை கேட்கவேண்டிய மனிதர் நீங்கள்தானென்று. என் மனத்துக்குத் தோன்றியது. நான் இப்படித் தைரிய மாகத் தேடிவந்தது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் உங்கள் எழுத்து என்னை உங்களிடம் பரிபூரண மான'நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. என்னைப் போல் துன்பப்படுகிற அபலைப் பெண்களைப் பற்றித்தானே நீங்கள் பாலைவனத்துப் பூக்களில் எழுதியிருக்கிறீர்கள்:

இந்த விநாடிவரை அவளிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கவோ, வினாக்களைத் தொடுக்கவோ செய்யாத சுகுணன் இப்போதுதான், . .

- "தயை செய்து உங்கள். பெயரை §: நான் அறிந்து. கொள்ளலாமா?” என்று மெல்ல வினாவினான். ---. . . ... " -

என் பெயர் கமலம். தந்தையும் சகோதரிகளும் கமலின் என்று செல்லமாக அழைப்பார்கள் -

"உங்களைப் போன்ற புதிய தலைமுறைப் பெண் களெல்லாம் ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ். கமலம் பெண்ணின் வாழ்வு. வீட்டுப் படிகளின் உள்ளேயே திருப்தியாக நடக்கமுடிந்த, தலைமுறையில் இன்று நாம் வாழவில்லை. புதிய தலை முறைப் பெண் வீட்டுக்கு இப்பால் வெளியேறியும் வாழ. வேண்டியிருக்கிறது பழகும் இடங்களும் வாழும் எல்லை. களும்ப்ெருக்ப் பெருகப் பெண் முன்னேறுகிறாள் என்பதை. விடத்த்ன்னைப்பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை மிகப் பல சமயங்களில் தானே நிர்வகிக்க வேண்டியுவனாகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/118&oldid=590489" இலிருந்து மீள்விக்கப்பட்டது