பக்கம்:நெற்றிக்கண்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 25

ஜர் ரங்கபாஷ்யமோ பாவங்களின் அவதாரம். அவருடைய முகத்தில் நடுநெற்றியில் சிவப்புக் கீற்றாக நெளியும் அடை யாளம் உள்ளே நிறைந்திருக்கும் அபாயங்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முன்னெச்சரிக்கையாக முகத்தில் ஒரு சிவப்புக் கோடு போட்டுக் காட்டினாற்போலச் சுகுண னுக்குத் தோன்றுமே ஒழியப் பவித்திரமான வைணவர்களின் சமயச் சின்னமாக அவரைப் பொறுத்தவரையில் மட்டும் அது தோன்றவே தோன்றாது. அவருடைய முன்னோர்கள் அக்னிஹோத்திரம், அக்னிசந்தானம், ஒளபாசனம், எல்லாம் செய்து அசல் வேதியர்களாக வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று சுகுணன் கேள்விப் பட்டிருந்தான். இவரோ தாம் புகுந்துவிட்ட துறைக்குத் தவிர்க்க முடியாத தேவை என்று தாமாகவே கற்பித்துச் கொண்டுவிட்ட குடி, கூத்து, மாமிசம் என்று சகல துறை களிலும் ஈன நிலைக்குப் போய்விட்டிருப்பதைச் சுகுணன் கவனித்திருக்கிறான். சாதாரணமான தேவைகளுக்காகக் கீழிறங்கிவிடுகிற மனிதர்களை அவனால் மனத்தாலும்கூட மன்னிக்க முடியாமலிருந்தது. இத்தனை சூழ்நிலைகளுக் கிடையேயும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வெளியீடுகளின் 'குரூப்"பில் ‘பூம்பொழிலை முடிந்தவரை தன் பொறுப்பில் தரமாக நடத்திக் கொண்டிருந்தான் அவன். இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் எப்போதாவது யாரிடமாவது "நான் சனிக்கிழமை ராத்திரிப் பலகாரம் சார்! ட்வென்டி இயர்ஸா’ இதை மட்டும் தவறவிடறதில்லே...'-என்று ரங்கபாஷ்யம் பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டால் அவனுக்குச் சிரிப்புத்தான் வரும். காரியாலய் முறைக்காக ஒரளவு கட்டுப்பாட்டுடன் ஒத்துப் போவதைத் தவிர நாகச்ாமி, ரங்கபாஷ்யம் போன்றவர்களை அவனால் மனமார மதிக்க முடியாமலிருந்தது. அவர்களிடமிருந்த் ஊழல்களைப் பார்க்கும்போது தன்னுடைய நக்கீர தைரியத்தோடு நிமிர்ந்து நின்றிருக்கிறான் அவன். இன்று ஆரங்கபாஷ்யம் அவனை அவனுடைய அறைக்குத் தேடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/127&oldid=590499" இலிருந்து மீள்விக்கப்பட்டது