பக்கம்:நெற்றிக்கண்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 33

தார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க நிர்வாகிகள் மரியாதையாக நடக்கவேண்டும்-என்பது போன்ற வாச கம் அடங்கிய பாட்ஜ்’ ஒன்றைச் சிலநாட்கள் தொடர்ந்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் காரியாலயத்துக்கு அணிந்து செல்ல வேண்டும் என்ற தீர்மானம் தான் அன்று செயற்குழுவில் வர இருந்தது. சுகுணனுடைய அன்றைய மன்நிலையில் இந்தத் தீர்மானத்தைப்பற்றி அதிகமாக அக்கறைகாட்ட வேண்டுமென்ற துடிப்பும் கண்டிப்பான ஞாபகமும் வந்திருந்தது அவனுக்கு செயற்குழுவில் சிலர் தீர்மானத்தை எதிர்த்தார்கள். இந்த பாட்ஜ் அணிந்து செல்கிறவர்கள் யாரென்று கவனித்து வைத்திருந்து நிர்வாகிகள் அவர்களைப் பழி வாங்கினால் என்ன செய்வ தென்று வினாவினார்கள் சிலர். 'அப்படிப் பழி வாங்குவது முடியாத காரியம். அப்படி யாராவது பழி வாங்கினால் யூனியன் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும்’என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயப்படுகிற வர்கள் பயப்படத்தான் செய்தார்கள். தீர்மானம் என்னவோ சுகுணனைப் போல் துணிவும் தன்மானமுமுள்ள இளந் தலைமுறைப் பத்திரிகையாளர்களின் பெருவாரியான ஆதரவினால் நிறைவேறிவிட்டது. அது நிறைவேறிய மகிழ்ச்சியோடு ஏழு-ஏழேகால் மணிக்குக் கூட்டம் முடிந்து அவன் அறைக்குத் திரும்பியபோது துளசியும் அவள் கணவனும் அவனைத் தேடி வந்துவிட்டு அறையில் அவனைக் காணாமல் காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தவர் க்ள் அவன் வருவதைப் பார்த்துவிட்டு மறுபடியும் கீழிறங்கி ாைர்கள். ஏதோ ஒரு நவநாகரிக ஒட்டலின் பெயரைச் சொல்லி அதில் ருஃப் கார்டனில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும் விசேட டின்னருக்கு மூன்று டிக்கட் வாங்கியிருப்பு தாகவும் அதற்குச் சுகுணனும் வரவேண்டுமென்றும் துளசி யின் சார்பில் அவள் கணவன் வேண்டினான். தான் வேண்டிக் கொள்வது நியாயமாயிருக்காது என்பதற்காகவே துளசி

9 سgه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/135&oldid=590507" இலிருந்து மீள்விக்கப்பட்டது