பக்கம்:நெற்றிக்கண்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 罩3莎·

ops7657 மனத்தோடு துளசியையும் கடைக் கண்ணால் பார்த், துச் சிரித்துக் கொண்டே மறுபடி சுகுணனை வற்புறுத்தி, னான் துளசியின் கணவன்,

தயவுசெய்து என்னை மன்னியுங்கள்...என்று சுகுணன் மீண்டும் மறுத்தபோது துளசியின் முகம் ஒளியற்றுச் சோபை. மங்கியது. கண்களிலும் உதடுகளிலும் மலர்ச்சி மறைந்து வாட்டம் வந்து படிந்தது. அவள் நெட்டுயிர்த்தாள். வாய் விட்டு அழ முடியாத குறையாக மீண்டும் மீண்டும் நெட்டுயிர்த்தாள். -

எந்த நிலையிலும் துளசியின் முகம் வாடுவது சுகுண ஆணுக்கும் அந்தரங்கமாகப் பிடிக்காதுதான். ஒரு செல்லக் குழந்தையைப் பாசத்தோடு கவனிப்பதுபோல் பிரியத்தின் எல்லைவரை சென்று அவள்மேல் அன்பு வைத்தவன் அவன். அவளுடைய உடல் கிடைக்கவில்லை என்பதனால் அந்த அன்பு இன்று அழிந்து போய்விடாது. ஒருமுறை ஏதோ கவனக் குறைவினால் துளசி தன் கைகளில் நகங்களைக் கத்தி கத்தியாக வளர விட்டிருந்தாள். அவளுடைய பூப் போன்ற மென்மையும் சந்தனம் போன்ற குளிர்ச்சியும் பொருந்திய விரல்களுக்கு அந்த நகங்களின் வளர்ச்சி பொருந்தாமலிருந்தது. அவள் தன்னுடைய திருவல்லிக் கேணி அறைக்கு வந்திருந்த ஒரு சமயத்தில் சுகுணனே சிரித்த படி எழுந்துபோய்த் தன்னுடைய நெயில் கட்டரை (நகம், வெட்டும் கருவி) எடுத்து வந்து, '"துளசி இந்தப் பூப் போன்ற கைகள் என்னுடையவை. நான் கொள்ளவேண்டி, -யவை. இவை பொலிவற்றிருப்பதை என்னால் சகிக்க, முடியாது’’-என்று சொல்லியபடியே அழகாக ஒற்றை மோதிரமணிந்த அவள் வலது கைவிரல்களைப்பற்றி நகங் களைக் கத்திரிக்கலானான்... - -

இதென்ன? நீங்கள் எனக்கு இப்படி எல்லாம் பணி விடை செய்துகொண்டு...? தயவு செய்து கையைவிடுங்கள். நான் அல்லவா உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும்' -என்று போலி வெட்கத்தோடு உண்மையில் அந்தப் பிடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/137&oldid=590509" இலிருந்து மீள்விக்கப்பட்டது