பக்கம்:நெற்றிக்கண்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置弓6 நெற்றிக் கண்

மகிழ்ந்து கொண்டே அவன் கைப்பிடியிலிருந்து திமிற, முயல்வதுபோல் நடித்தாள் துளசி. -

'நிலாக் கதிர்களின்மேல் நட்சத்திரம் விழுந்து கிடப்பது. போல் இந்த ஒற்றை மேதிரம்தான் உன் கைக்கு எத்தனை அழகாயிருக்கிறது துளசி?'-என்று அப்போது அவளை. வியந்திருந்தான் சுகுணன். அதற்கு அடுத்த வாரம் எழுதிய "மோதிர விரல்' என்னும் கவிதையில்,

"தீயினில் தளிர்த்ததோர்-பொற்

செழுங் கொழுந்தெனவே மாயக் கைவிரலாள் அதில்

மன்மதன் சொக்கிடும் கோல் மோகனச் சிறு

மோதிர மொன்றுடையாள்' என்று சில வரிகள் வந்தன. 'இப்படி நீங்கள் ஒவ்வொன் ன்றயும் எழுதுவதாயிருந்தால் இனிமேல் உங்கள் முன்னால் தட்டுப்படுவதற்கே பயப்படவேண்டும் போலிருக்கிறதே!-- என்று இந்த வரிகளைப் படித்துவிட்டுப் பாதி வெட்கமும் பாதிக் கோபமுமாகத் துளசி அவனைக் கேட்டாள்.

என்ன செய்வது துளசீ? எனக்கு வேறெந்தப் பெண் களின் கைகளைப் பற்றியும் தெரியாதே?-என்று சொல்லி நகைத்தான் சுகுண்ன். அந்தப் பெருமையில் அவளும் மலராக மலர்ந்து குழைந்தாள். அப்படிப்பட்டவள் முகம் வ்ாடும்படி இன்று விருந்துக்கு வரமாட்டேனென்று மறுக்கும் போது அவன் மனமும் அதைச் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தோடும், வேதனையோடும் தான் செய்தது. ஏமாற்றம் என்ற உணர்வின் ஒருபுறம் தவிப்பும், மறுபுறம் ஏக்கமுமாகத் துளசி கணவன்ோடு காரில் புறப்பட்டாள். போகும்போது, போய் வருகிறேன்-என்று வாய் திறந்து வ்ார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்குக் கூடத் தெம் பில்லாமல் கண்ணிர் முட்டிப் பளபளக்கும் விழிகளை அசைத்துத் தன்லயைச் சாய்த்து வருகிறேன் என்பதுபோல் பாவனை செய்யத்தான் அவள்ால் முடிந்தது. இன்னொருத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/138&oldid=590511" இலிருந்து மீள்விக்கப்பட்டது