பக்கம்:நெற்றிக்கண்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நெற்றிக் கண்

தன்னுடைய பத்திரிகையின் 'இலக்கிய மேடை"கேள்வி பதில் :பகுதியில் கவிதை என்பதுதான் என்ன? சுருக்கமான-அர்த்த புஷ்டியுள்ள பதில் தேவை?-என்ப தாகக் கேட்கப்பட்டிருந்த ஒரு நேயரின் கேள்விக்கு, மனித னின் நாகரிகம் பாஷை, பாஷையின் நாகரிகம் கவிதை'என்று தான் முன்பு எப்போதோ பதில் கூறியிருந்ததை இப் போது மீண்டும் நினைவு கூர்ந்தான் சுகுணன். அந்த அழ கான-இரத்தினச் சுருக்கமான பதிலுக்காக அப்போது அவனைப் பலர் நேரிலும் கடித மூலமாகவும் பாராட்டினார் கள். ஏன்? துளசியும் கூடத்தான் பாராட்டினாள்.

அவள் சிரிக்கும்போது சிரிப்பின் முதல் சாயல் கண்களி லும்-இரண்டாவது சாயல் இதழ்களிலும், மூன்றாவது சாயல் மோகம் கனிந்து வெறியேறி நிற்கும் அந்த ரோஜாப் பூக் கன்னங்களிலுமாக மலரும். அதாவது அவளுடைய முகத்தில் மூன்று சிரிப்புக்கள் உண்டு. அந்தக் கண்களும், இதழ்களும், கன்னங்களும், சிரிக்கச் சிரிக்க அவள் பூம் பொழில் காரியாலய அறையில் தன்னைத் தேடிவந்து பாராட்டிவிட்டுப் போன சித்திரம் அல்லது சித்திர நினைவுஇன்னும் அவனுள் காலத்தின் பசுமையாக நிறைந்திருக் கிறது. . -

பூத்த பூவிலிருந்து பூக்கிற சூட்டில் வேகமாகக் கிளரும் நறுமணத்துக்கு வெறி' என்று தமிழில் ஒரு பெயருண்டு ஒரு பெண்ணின் கனிந்து நிற்கிற அழகு சம்பந்தமாக ஒர் ஆணின் மனத்தில் ஏற்படுகிற வேகமான கிளர்ச்சிக்கும் இந்தப் பதத்தையே இந்தப் புதிய அர்த்தத்தோடு சிந்தித் துப் பார்த்தால் எத்தனை நயமாயிருக்கிறது? இப்படிப் பதங்களையும் அர்த்தத்தையும் புதிய தலைமுறைக் கேற்ற புதிய பொருள்களோடு-அல்லது பழைய தலைமுறை உணர்ந்து அங்கீகரிக்கத் தவறிவிட்ட ஒரு புதிய நயத்தோடு சிந்திப்பது சுகுணனுக்கு மிகவும் விருப்பமான காரியம். இப்படிச் சிந்திப்பதனாலேயே நாளும் புதுமையாய் வளர்ந் திருந்தான் அவன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/14&oldid=590380" இலிருந்து மீள்விக்கப்பட்டது