பக்கம்:நெற்றிக்கண்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩44... நெற்றிக் கண்.

அவனுடைய அந்தக் கேள்வியை அவர் எந்தவிதத்திலும் குத்தலாகவோ நையாண்டியாகவோ எடுத்துக் கொண்டு தயங்கவேயில்லை; பெருமையுடனேயே பதில் சொன்னார்.

அதையேன் கேட்கிறீர்கள்? 'பை-எலக்ஷனில்:அதாவது துணைத் தேர்தலில் நின்றால் வெற்றியா, தோல்வியா என்று அறிந்து கொள்வதற்காக- உதக மண்டலத்துக்கே அழைத்துக்கொண்டு போய்விட்டார் ஒரு நண்பர். அங்கே ஒரு தனி பங்களாவிலே மூன்று நாள் கைரேகை எல்லாம் பார்த்து உறுதியாக நிற்கலாமென்று தெரிவித்த பின்புதான் அந்த நண்பருக்குத் தேர்தலில்

நிற்பதற்கே துணிவு வந்தது...'

தேர்தலிலே வெற்றிபெறக் கைரேகை பாாப்பதை விடப் பொது மக்களின் நம்பிக்கையும் விசுவாசமும் யார் பக்கமிருக்கிறதென்று பார்ப்பதல்லவா முக்கியம்?"-என்று சுகுணன் கேட்ட கேள்விக்கு அவர் மறுமொழி கூற்வில்லை. வேறு எதையோ ாேசத் தொடங்கினார்.

அதிருக்கட்டும்! நான் இப்போது வேறு ஒரு காரிய மாக உங்களிடம் வந்தேன். திருவல்லிக்கேணி பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலையில் பல்பத்திரிகைக் காவலர் நாகசாமியைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தும் விழா ஒன்று நடக்க ஏற்பாடாகி வருகிறது. அமைச்சர் தலைமை தாங்குகிறார். காலை மலர் சர்மா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராயிருக்கிறார். நீங்களும் அந்த விழாவில் நாகசாமியைப் பாராட்டிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். மறுக்காமல் அவசியம் ஒப்புக் கொள்வீர்களென்று நினைக்கிறேன்.' -

"சொற்பொழிவாற்றுவது இருக்கட்டும் ஐயா! அதென்னவோ பல்பத்திரிகைக்காவலர்'-என்று நாகசாமி வியின் பெயருக்கு முன்னால் ஏதோ ஒர் அடைமொழி க்றினர்களே. அதற்கென்ன அர்த்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/146&oldid=590520" இலிருந்து மீள்விக்கப்பட்டது