பக்கம்:நெற்றிக்கண்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நெற்றிக் கண்

ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தே சுகுணனுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் டெலிவரி லெட்டரும் எழுதிவிட்டார். கடிதத்தை அப்படியே காலைமலர் சர்மாவுக்குக் கொடுத் தனுப்பி விட்டான் சுகுணன். கட்டுரைத் தொடர் சர்மாவின் கைவசம் எடிட்' செய்யக் கொடுக்கப்பட் டிருந்ததனால் என்ன செய்ய வேண்டுமோ அதை அவரே செய்து கொள்ளட்டுமென்றுதான் நாகசாமியின் கடிதத்தை அவரிடம் அனுப்பியிருந்தான் சுகுணன். சர்மாவோ கட்டு ரைத் தொடரை அடுத்த வாரமே வெளியிடுவதாக அறி விப்புப் போடவேண்டுமென்று சுகுணனை வற்புறுத்தினார். அட்டுரைத் தொடர் அடுத்த வாரமே வெளிவருமென்று அதிக ஆர்வத்தேடுே சர்மா நாகசாமிக்குத் தந்தியும் கொடுத்து விட்டார். பூம்பொழில் இதழில் வெளியிடத் தகுதி உண்டா இல்லையா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தப் பிரயாணக் கட்டுரை விஷயத்தில் சுகுணன் மேற்கொள்ள விரும்பவில்லை. அது நாகசாமியின் காரிய ஆசை என்றோ. சர்மாவின் பேராசை என்றோ கருதி விட்டு விட்டான். ஏற்கெனவே சர்மா நாகசாமியிடம் 'சந்திரசூடன் ஐ. சி. எஸ் ஸின் கட்டுரைகளை வெளியிடு வதில் சுகுணனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை" என்று சொல்லிக் கோள்மூட்டியிருப்பார் போலிருந்தது. அதற்குப் பிறகு நாகசாமி இரண்டொரு முறை சுகுண னிடம் அழுத்தமாகவும் வன்மையாகவும் பேசியதிலிருந்து இது தெரிந்தது. ரங்கபாஷ்யம், சர்மா இருவருமே தன்னைப் பற்றி நாகசாமியிட்ம் கோள் மூட்டி நெருப்பு வைத்து வருவதாக அவனால் அதுமானிக்க முடிந்திருந்தது. அந்தக் கட்டுரைத் தொடரைப் பற்றிய உண்மைக் கருத்தை இப் போதும் அவன் தெரிவித்தால், கட்டுரையை வெளியிடச் சுகுனனுக்குச் சம்மதமில்லை என்றே மீண்டும் இரகசிய மாக.நாகசாமிக்கும் கடிதம் எழுதினாலும் எழுதி விடுவார் சர்மா. நாகசாமியைக் காக்கை பிடிப்பதில் சர்மாதான் அந்தக் காரியாலயத்தில் முதல் பரிசு வாங்கத் தகுதியான வர். நாகசாமி என்றைக்குப் பிறந்தார். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/158&oldid=590533" இலிருந்து மீள்விக்கப்பட்டது