பக்கம்:நெற்றிக்கண்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 1.65

இல்லை. எழுந்திருந்து வெளியே வந்து பையனைத் தேடி யும் அவன் அகப்படவில்லை. சுகுணன் இவ்வாறு பையனைத் தேடிக்கொண்டு நின்ற போது சர்மா அடுத்த அறையிலிருந்து வெளிவந்து, -

என்ன தேடறேள்? பையனை இங்கிருந்து சர்க்குலே டிைன் டிபார்ட்மெண்டுக்கு மாத்திட்டதாகக் கேள்விப்பட் டேனே' என்று குரலைத் தயங்கினாற் போல இழுத்துப்

பேசினார்.

'நானாவது இந்த டிபார்ட்மெண்ட்லேதான் இருக் கேனா? இல்லையா? என்னையும் எங்கேயாவது எனக்குத் தெரியாமலேயே மாற்றியிருக்கப் போகிறார்கள்?’ என்று சிரித்தபடியே சர்மாவிடம் கேட்டு விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டியவற்றைத் தானே கையிலெடுத்துக் கொண்டு ஃபோர்மெனைத் தேடி அச்சகத்தை நோக்கி நடந்தான் அவன். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு அவனைப் பார்த்ததும் ஏதோ தயக்கத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். அவன் கையெழுத்துப் பிரதிகளை அவரிடம் நீட்டியபோது, 'ஒரு நிமிஷம் பொறுத்துக்குங்க சார் ! உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்...' என்று சைகை காண்பித்து யாரும் இல்லாத ஒரு மூலைக்குச் சுகுணனை அழைத்தார் நாயுடு. சுகுணன் நாயுடுவைப் பின்தொடர்ந்தான். -

சார் என்னைத் தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க எந்த மேனுஸ்கிரிப்ட்' கொடுத்தாலும் நான் கம்போஸுக்கு வாங்கப்படாதாம். கொடுக்கிற மேனுஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்துச் சர்மா சாரும் ரங்கபாஷ்யம் சாரும் "அப்ரூவ்” பண்ணிக் கையெழுத்துப் போட்டிருந்தால்தான் நான் அதைக் கம்போஸ்-க்கு எடுத்துக்கணுமாம். இதை ஐயாவே ஃபோன்லே எங்கிட்டச் சொன்னாரு என்று. நாயுடு கூறியபோது சுகுணனின் மனம் கொதித்தது. சமூகத்தின் முதல் நெற்றிக் கண் தனக்கு மிக அருகி

நெ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/167&oldid=590543" இலிருந்து மீள்விக்கப்பட்டது