பக்கம்:நெற்றிக்கண்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 நெற்றிக் கன்

பெரியவர்களானார்கள். அவனும் அவன் தங்கையும்: பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்புவரை கோவையில் கழித்தார்கள். அப்போது அவர்கள் தந்தை கோயம்புத்துனர் கிழக்குப் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். நாணயத்தையும், ஒழுக்கத்தையும், சுய மரியாதையையும் போற்றுவதில் நெருப்பாயிருந்தவர் அவன் தந்தை. சுகுணனின் தாய் இறந்த பிறகு அவர் இரண்டாவதுமணத்தைப்பற்றி நினைக்கவும் இல்லை. தேச சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையிலிருந்த சமயத்தில் மகாத்மாவின் கொள்கைகள் மேல் ஏற்பட்ட அபிமானத் தாலும்-அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிந்து, உத்தியோகம் பார்க்க விரும்பாததாலும் வேலையை உதறி தள்ளிவிட்ட பெருமையும் அவருக்கு இருந்தது. குழந்தை களையும் அதே நாணயத்தோடும், சுயமரியாதையோடும், கட்டுப்பாட்டோடும் வளர்த்திருந்தார் அவர். கூலிபோல் கிடைக்கும் சம்பளத்துக்காகச் சொந்த் தேசத்தின் சொந்த சகோதரர்கள் போன்ற தேச பக்தர்களைத் தம் கை களாலேயே அடித்து நொறுக்க நேர்வதை விரும்பாமல் தான் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறியிருந்தார் அவர். அந்த வேலையை உதறியபின் சுகுணனையும் அவன் தங்கை யையும் கல்லூரிக் கல்வி வரை படிக்கச் செய்து ஆளாக்கு வதற்காகப் பூர்வீகச் சொத்து முழுவதையும் அவர் பணயம் வைக்க வேண்டியிருந்தது. சுகுணனையும் கடுமையாக உழைக்கவிட வேண்டியிருந்தது. அதுவும் போதாமல்குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்குவதற்காகக் குமாஸ்தா வேலையிலிருந்து டைப்பிஸ்ட் வேலைவரை கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தும் பொருள் சட்டியாகவேண்டிய சிரமமும் அவருடைய முதுமைக் காலம் வரை அவருக்கு இருந்தது. ஆனாலும் அந்தச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளை அதிகத் துன்பம் தெரியாமல் வளர்த்தார். அவர். கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளனாகத் தமிழுலகுக்கு அறிமுக மாகிவிட்ட சுகுணன் படிப்பு முடிந்ததும் சட்டக்கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/174&oldid=590550" இலிருந்து மீள்விக்கப்பட்டது