பக்கம்:நெற்றிக்கண்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நெற்றிக் கண்

யாகப் பெருகத் தொடங்கிவிட்டது. தெரு முனைகளில் பிளாட்பாரத்தில் மல்லிகையும் சாதிப் பூவுமாகப் பூக்கூடை களும் கடைகளும் பழைய புத்தகம் பத்திரிகைப் பரப்புக் களும் முளைத்துவிட்டன. மாலைவேளை என்கிற நகர உற்சவம் ஆரம்பமாகிவிட்டது. மனத்தில் சுமையும், சிந்தனைகளும், கனத்துவிட்ட அந்த விநாடியில் இத்தனை லட்சம் மக்கள் நிரம்பிய இந்தச் சென்னையில்-இந்த 'மனச் சுமையும் கனத்தையும்-கேட்டுத் தோள்மாற்றிக் கொள்ள முடிந்த ஓர் உண்மை நண்பனை உடனே பார்க்க வேண்டும் போல் தவிப்பாயிருந்தது சுகுணனுக்கு. பாலை வனத்தில் தண்ணிர்த் தாகம் எடுப்பதுபோல் இப்படிச் சமயத்தில் நல்ல மனிதனைத் தேடிச் சந்திக்க வேண்டு மென்ற தாகமும் ஏற்பட்டு விடுகிறது, மனத்தோடு கலக்க முடிந்தவராக-அந்த மனத்தின் சுமையைத் தோள்மாற்றிக் கொள்ள முடிந்தவராக யாரையேனும் உடனே அந்தக் கணமே பறந்து போய்ப் பார்த்துவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு, துளசியின் நினைவு ஒருகணம் எழுந்து உள்ளேயே கோபமாக மாறி அடங்கிவிட்டது. ஒரு காலத்தில் அவள் தான் அவனுடைய மனத்தின் சுமை களைத் தோள் மாற்றிக் கொண்டாள், அந்த உண்மையில் இனிமையும் அநுராகமும்கூட இருந்தன. இப்போது அவை இல்லை. அந்த இடத்தில் விரக்தியும் கோபமும் மீதமிருந் தன. இப்போது-துளசியைப் போல் மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள அவனுக்கு யாருமில்லை ஆனால் ஒர் உண்மை நண்பன்ை எண்ணித் தேடியது அவன் மனம். ஏதோ நினைத்துக் கொண்டே வந்தபோது கொள்கை களிலும், சிந்தனைகளிலும், தன்னோடு கருத்தொற்றுமை யும் நட்பும் உள்ளவரான நேஷனல் டைம்ஸ் மகா தேவனை எண்ணினான் சுகுனன். அவருடைய நேஷனல் டைம்ஸ் காலை பதிப்பாக வெளியாகும் ஆங்கிலத் தினசரி யாகையினால் இரவு பத்துமணி வரை காரியாலயத்தில் இருப்பார் அவர். நேஷனல் டைம்ஸ் காரியாலயம் தம்: செட்டித் தெருவில் ஒரு பழைய காலக் கட்டிடத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/178&oldid=590554" இலிருந்து மீள்விக்கப்பட்டது