பக்கம்:நெற்றிக்கண்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 நெற்றிக் கண்

அவனுடைய பல வர்ணனைகளுக்கு அவளுடைய அழகு ஒரு சாட்சியாகவோ தூண்டுதலாகவோ இருந்திருக்கிற தென்பதை அவனாளேயே இப்போது மறக்கவோ மறுக்கவோ முடியாது. உலகுக்குத் தெரிந்தோ தெரி யாமலோ அவள் அவனுடைய எழுத்துக்குத் துண்டுதலாக வும், எழுதும்போது சாட்சியாகவும், எழுதி முடித்தபின் ரஸிகையாகவும் இருந்திருக்கிறாள். சின்ன சின்ன அரிசிப் பல் வரிசையின் நெருக்கமான அமைப்போடும்-எயிறு என்று பழைய தமிழில் சொல்லுகிறார்களே-அத்தகைய பல்லழகோடும்-அவள் கலீர் கலீர்ரென்று சிரித்துப் பாராட்டிய பாராட்டுக்கள் அவனை வசீகரித்ததும் மின்னு கிற கருமையோடு சிற்றலையிட்டுக் கற்றை கற்றையாகப் புரளும் அவளுடைய மோகனமான கூந்தலும்-அந்தக் கூந்தலின் கருமைக்குக் காதோரம் ஒரு மாற்று நிறம்போலச் செவிகளில் அவள் அணிந்திருந்த பொன் வளையங்களும்அந்த வளையங்களை விடப் பொன் நிறமான செவிகளும், கைவிரல்களால் தொட்டு மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும் போன்ற அழகிய கழுத்தும்,- அவனை வசீகரித்தன. தோழி என்ற தன்னுடைய புகழ்பெற்ற நாவலில் முன்பு அவன் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தான்.

':முகிலுமிருளும் கலந்துபின்

மூண்டுசரிந்த கருங்குழலாள் துகிலும் பட்டும் புனைந்து பின்

தோன்றிவந்த பெண்மயிலாள் குயிலும் தேனும் இனைந்து பின்

கூவிப் பதிந்த சொல்லிசையாள் வெயிலும் ஒளியும் செம்பொனும்

வீதமாகச் சமைத்த மேனியினாள்-' என்ற அந்தக் கவிதைக்கு அவள் உடம்பே அவனறிந்த சாட்சி. பல அழகிய சம்பாஷணைகள் அவளிடம் பேசிப் பேசியே அவனுக்குக் கிடைத்திருந்தன, மிக நெருக்கமாக அமர்ந்து அவளிடம் இதமாகப் பேசி ஒருவர் மனம் மற்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/18&oldid=590384" இலிருந்து மீள்விக்கப்பட்டது