பக்கம்:நெற்றிக்கண்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நெற்றிக் கண்

பார்த்து நாடினால்தான் இனியாவது நல்ல சூழ்நிலை உருவாகும்.' -

இதற்கு அவ்வளவு விரைவாக விடிவுகாலம் பிறந்து, விடாது சுகுணன்! நீண்ட நாளாகும். இப்போது உங்கள் வரை நீங்கள் என்ன செய்யலாம் என்று பாப்போம். நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து இனிமேல் 'மாருதி பப்ளி: கேஷன்ஸ் குரூப் கன்ஸ்ர்னில் நீங்கள் இருக்க முடியாதென்று. தான் எனக்கும் தோன்றுகிறது. எத்தனையோ வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும் ஒரு நல்ல பத்திரிகையாள னிடம் மீதமிருக்க வேண்டியது அவனுடைய சொந்த, அகங்காரம்தான்’ என்று இந்தத் துறையில் அதுபவம் மிக்க. ஒரு பெரியவர் சொல்வதுண்டு. இந்த 'அகங்காரத்தைப் பத்திரிகைக்காரன் எந்த நிலையிலும் எந்த விலையிலும் விற்றுவிடக் கூடாது...ஆனால் ஒரு விஷயம்! இதில் நீங்கள் எப்படி முடிவு செய்யப் போகிறீர்ளென்றுதான் எனக்குப் புரியவில்லை, இப்போது நீங்கள் பூம்பொழிலில் எழுதி: வருகிற தொடர்கதை'யை என்ன செய்யப் போகிறீர்கள்? அதை அரை குறையாக நிறுத்திவிடக்கூடாது. ஆர்வத் தோடு படிக்கிற நல்ல வாசகர்களை அதிருப்திப்படுத்துவது. நன்றாயிராது.”

"அதைப்பற்றிக் கவலையில்லை சார்! இயற்கை யாகவே அது வருகிற வாரம் முடிந்துவிடுகிறது. நான் அங்கிருந்து விலகிவிட நினைக்கும்முன்பே திட்டமிட்டிருந்த, முடிவு அது. தொடங்கி ஒரு வருஷம் ஆகிறது. தானாகவே கதை முடிகிற நேரம்தான்...'

அப்படியானால் உங்கள் முடிவு சரிதான்; மேலே என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் நேஷனல் டைம்ஸின் கதவுகள் எப்போதும் திறந்திருக். கின்றன. ஆனால் இங்கே என்னிடம் ஒரு கஷ்டம் உண்டு. என்னிடமிருக்கும் குறைந்த செளகரியங்களையும் நிறைந்த, கஷ்டங்களையும் சேர்த்தே நீங்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையானால் யாராவது தெரிந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/182&oldid=590558" இலிருந்து மீள்விக்கப்பட்டது