பக்கம்:நெற்றிக்கண்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - நெற்றிக் கண்

பழைய நக்கீரன் நெற்றிக் கண்ணில் வெதும்பி விட் டான். ஆனால் புதிய நக்கீரர்களாகிய நம்மைப் போன்ற பத்திரிகையாளர்களோ எத்தனை நெற்றிக் கண் எவ்வளவு உயரத்திலிருந்து திறந்தாலும் சூடுபட்டுக் கொண்டே அநீதியைச் சுட்டெரிக்க வேண்டும்! இங்கே டைம்ஸில், சேர்ந்து என்னோடு எனது கொஞ்ச செளகரியங்களையும்அதிகக் கஷ்டங்களையும் பங்குகொள்ள நீங்களும் தயாரா விருக்கிறீர்களா?' -என்று கடைசியில் வெளிப்படை யாகவே கேட்டார் மகாதேவன். .

"முதலில் என் சகோதரியைப் பார்க்கக் கோயம்புத்துனர் போய்வர வேண்டுமென்று இருக்கிறேன். திரும்பி வந்ததும் மறுபடி உங்களை சந்திக்கிறேன்சார்-என்றான் சுகுணன். அவரும் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை. இரு வரும் தம்புச் செட்டித் தெருவிலேயே இருந்த ஒரு வடக் கத்திக் கடையில் சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டுவிட்டு வந்து மறுபடியும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் அதிகமாகி விட்டது. பஸ் போக்கு வரவுகூட நின்றி ருந்தது. மகாதேவனுக்கு வீடு ஐஸ்ஹவுஸ் பக்கம் இருந்தது. 'நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?-" என்று அவரைக் கேட்டான் சுகுணன். .

என்னைப்பற்றிக் கவலையில்லை. வீட்டுக்குப்போனா லும் போவேன். இங்கேயே "பழைய பார்சல் கட்டு ஒன்றைத் தலைக்கு.எடுத்து வைத்துக்கொண்டு படுத்தாலும் படுத்து விடுவேன். ஒன்று வேண்டுமானால் செய்யலாம், 'நீங்களும் திருவல்லிக்கேணிக்கே போக வேண்டியிருப்பத னால் இரண்டு பேருமாகப் பேசிக்கொண்டே நடந்து போய் விடலாம்-என்றார் மகாதேவன். சுகுணனும் அதற்குச் சம்மதித்தான், மகாதேவனிடம் அவனுக்குப் பிடித்தமான குணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் செளகரியங் களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் தன்னுடைய அசெளகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொண்டவர் அவர். பஸ்ஸில், ரிக்ஷாவில், சமயங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/184&oldid=590561" இலிருந்து மீள்விக்கப்பட்டது