பக்கம்:நெற்றிக்கண்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 83

ஆநடையில், அவசியமானபோது டாக்ளியில், என்று போலி ஸ்டேட்டஸ் எதையும் கற்பித்துக் கொண்டு சீரழி யாமல் முடிந்தபடி வாழ்கிறவர் அவர். அவருடைய இந்த எளிமையை அவன் மிகவும் விரும்பினான். தங்களைப் பலர் பார்த்துத் தாங்கள் நடந்துபோவதைப் பரிதாபமாக நோக்குவது போலவும்-எனவே தாங்கள் மண்ணைமிதித்து நடக்கவே கூடாது என்பது போலவும்-போலியாக கற்பித் துக்கொண்ட ஸ்டேட்டஸ் பாவனையினால் சென்னைப் பட்டினத்துப் பத்திரிகையாளர் சிலர் வசதியற்ற் நிலையி லும் கடன் வாங்கிக் கார்களிலே பறப்பதைப் பார்த்திருந் தவன் அவன். அதே ஊரில் மகாதேவனைப் போல் எளிமை கொண்டாடும் சில பத்திரிகையுலக மகாத்மாக்களும் இருப் பது அவனைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

அவர்களிருவரும் கோட்டை ஸ்டேஷன் பாலத்தில் ஏறி மவுண்ட்ரோட்டுக்காக ஐலண்ட் கிரவுண்ட் நோக்கித் திரும் பியபோது உச்சி நிலா ஒளியில் எதிரே சர். தாமஸ் மன்றோ வின் குதிரை வாயுவேகத்தில் பாய்ந்து வருவதுபோல் அவசர மாக ஒரு பிரமையை உண்டாக்கியது. ஒரு நிமிஷம். நடப் பதை நிறுத்திவிட்டு நின்று கவனித்தபோது மன்றோவின் "குதிரையும் நின்றுவிட்டது. நிலா ஒளியில் விசாலமான .சாலையில் நட்டநடுவே அந்தக் குதிரைச் சிலை மிகமிக வசீகரமாகத் தோற்றமளித்தது. அவன் அந்தச் சிலையைக் கூர்ந்து கவனிப்பதையும் அவன் மனத்தில் ஒடும் சிந்தனை யையும் அதுமானித்தவராக மகாதேவன் அவனிடம் கூறலானார்.

"பதினைந்து வருடங்களாக இந்தச் சிலைதான் என் வாழ்க்கையின் குருவாக இருந்து வருகிறது சுகுணன்! எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ விதமான மனநிலைகளில் இந்தச் சிலையை நான் பார்க்க நேர்ந்திருக்' கிறது. நள்ளிரவில், நடுப்பகலில், வெயில்விரியாத வைகறை யில், முன்னிரவில்-என்று எத்தனையோ சமயங்களில் இக் குதிரை வீரனைப் பார்த்திருக்கிறேன். கைநிறையப் பணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/185&oldid=590562" இலிருந்து மீள்விக்கப்பட்டது