பக்கம்:நெற்றிக்கண்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நெற்றிக் கண்

அனுப்பியிருந்தார் நாகசாமி. பாண்டுரங்கனார்-பூம்பொழி வின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுவிட்டதாக அன்று மாலையே வேறோருவர் மூலம் கேள்விப்பட்டான் சுகுணன். நாகசாமிக்குப் பல் பத்திரிகைக் காவலர்’ பட்டமளிப்பு விழா நடத்தியது போன்ற காரியங்களில் முன்பு பாண்டு ரங்க்னார் ஈடுப்ட்டது வீண்போகவில்லை என்று இப் பொழுது சுகுணனுக்குத் தோன்றியது. இந்தச் சில நாட் களில் மகாதேவனோடு பழகி உடனிருந்து பார்த்ததில் அவ ருடைய அநுபவமும், பத்திரிகைத்துறை ஞானமும், தன்னம்பிக்கையும், சிந்தனைச் சுதந்திரமும் அவனை வெகு வாகக் கவர்ந்தன. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவரிடமிருந்த அறிவுச் செருக்கும் அனுக்குப் பிடித்திருந்

கது. சுகுணனிடம் பேசியபோது அடிக்கடி,

'ஒருமை மகளிரே போலப் பெருமையும் - தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு'- . என்ற திருக்குறளைக் கூறி இந்தக் குறளில் கூறப்படுகிறதை ஒத்த பெருமைதான் பத்திரிகையாளனின் பெருமையும் என்று வற்புறுத்துவார் மகாதேவன். பத்திரிகையாளனின் பெருமிதத்தைக் கற்புடன் ஒப்பிடுவார் அவர். இந்த நாட்டில் பத்திரிகை தொழில் வெறும் வியாபாரமாகாமல் தேசபக்தியும்-சேவை மனப்பான்மையும் நிறைந்த இயக்க மாகவேண்டுமானால் மகாதேவனைப் போன்ற பத்திரிகை யாளர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டுமென்று ஆகுனன் நினைத்தான். அவன் பூம்பொழில் வேலை ை விட்டபின் ஒருநாள் அதிகாலையில் ஃபோர்மென் நாயுடு அவனை அறையில் வந்து பார்த்து விட்டுப் போனார். அவன் பூம்பொழிவிலிருந்து வெளியேற நேர்ந்தது பற்றியும் வருந்தினார். காலைமலர் சர்மாவின் மேற்பார்வையோடு பைந்தமிழ் நாவலர் பா. பாண்டுரங்க னார் பூம்பொழிலின் புதிய ஆசிரியராக வந்து-கந்த புராணத் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்திருப்பது பெற்றியும் ஃபோர்மென் தெரிவித்தார். இதி, நேரம் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/194&oldid=590571" இலிருந்து மீள்விக்கப்பட்டது