பக்கம்:நெற்றிக்கண்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩9套 நெற்றிக் கண்

'பாங்கர்'களாகவும் வர்த்தகர்களாகவுமுள்ள பெரும் பத்திரி கைகளின் முதலாளிகளோடு கருத்து மாறுபட்டு வெளியேறி நான் சொந்தமாகப் பத்திரிகை நடத்துவதால்-வர்த்தகர் கள் என்னைப் பழிவாங்குவதற்காக விளம்பர ஆதரவுகளை தருவதில்லை. பொதுமக்களோ இந்த நாட்டில் பழக்கத் துக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் புதிய தற்கும் நல்லதற்கும் பழக்கப்படுத்த அதிக முயற்சி வேண்டி யிருக்கிறது. கன்ஸர் வேடிவ் மனப்பான்மை தழும்பேறிப் போன தேசத்தில் எண்ணங்களை மாற்றவே பெரும்புரட்சி தேவைப்படுகிறது. நான் சிரமப்படுவதற்கு அதுதான் காரணம். இவ்வளவிற்கும் என் பத்திரிகையை எனக்காகவே பலர் பிடிவாதமாக வாங்குகிறார்கள். பணமாகக் கொடுக்க முடியாதவர்கள் தானிய மூட்டைகளாகவும், பண்டங்களா கவும், கூடச் சந்தாக்கட்டி என் பத்திரிகையை வாங்கு கிறார்கள். ஆனால் வாங்குகிற இந்தச் சிறுபான்மையினரை விட வாங்காமல் என்னைத் தவிக்கவிடும் பெரும்பான்மை யோரை நினைத்துத் தான் நான் ஏங்குகிறேன் சுகுனன்...'

உங்கள் ஏக்கம் நாளடைவில் தீர்ந்துவிடும் சார்! உங்களைப் பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறினீர் களே; அந்தச் சிறுபான்மையினரில் ஒருவனாக-என்னையும் எண்ணி இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இது இப்போது உங்கள் காரியத்துக்குப் பயன்படட்டும். மறுபடி எனக்குத் தேவையானபோது இதை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்-என்று சொல்லி அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தான் சுகுணன். சமூகத்தில் எந்தெந்த வடிவில் குற்றங்களும், தீமைகளும், பிழைகளும் மலிந்திருக் கின்றனவோ-அந்தந்தக் குற்றத்தை அங்கங்கே எதிர்த்து நின்று, இதில் குற்றமிருக்கிறது-என்று சொல்ல எழுந்திருக், கும் யாரோ ஒருவனை எத்தனை நெற்றிக்கண்கள் திறந்து வெதுப்புகின்றன என்று எண்ணிப் பார்க்கவே துன்பமா யிருந்தது சுகுணனுக்கு. இப்படி நெற்றிக்கண்களால் வெதும்பி மனம் நமத்துச் சாம்பலாகிவிடாமல் துணிந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/196&oldid=590573" இலிருந்து மீள்விக்கப்பட்டது