பக்கம்:நெற்றிக்கண்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 195

வெளியேறியவர் என்ற முறையில் நேஷனல் டைம்ஸ்" மகாதேவனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகாதேவனுடைய முயற்சிக்கு கிடைக்கிற ஆதரவும் வெற் றியும் இந்த நாட்டின் சுதந்திர சிந்தனையாளனுக்குக் கிடைக்கிற முதல் ஆதரவும்...முதல் வெற்றியுமாக அமையு மென்று அவன் நம்பினான். பூம்பொழிலை விட்ட பின்பு 'நேஷனல் டைம்ஸின்' ஸ்ப்ளிமெண்ட் வேலைகளிலும் மகா தேவனோடு உதவியாயிருப்பதிலும் அவனுடைய நேரத்தில் பெரும்பகுதி கழிந்து கொண்டிருந்ததனால் அவன் தன்னுடைய அறையில் தங்குவதே அபூர்வமாயிருந்தது. அப்படியே அவன் அறைக்குப் போனாலும் பதினொரு மணி-பன்னிரண்டு மணி என்று அகாலத்தில் தான் போக முடிந்தது. மறுபடி அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டுத் தம்புச் செட்டித் தெருவுக்குப்போக வேண்டியிருந்ததனால் டெல்லியிலிருந்து மீண்டும் துளசி கூப்பிட்டாளாஇல்லையா-என்ற தகவலைக்கூட அவன் தெரிந்துகொள்ள முடியாமலிருந்தது. அப்படி இடைவிடாமல் அவருக்காக உழைப்பதில் ஒருவிதமான ஆத்ம திருப்தியையும் நிறைவை யும் உணர்ந்தான் சுகுணன். 3. *

X- இப்படிச் சுறு சுறுப்பாக அவனுடைய நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் அதிசயமும் ஆனால் எதிர்பார்த்திருத்ததுமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நேரத்தில் சிறிதும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத தொலைவிலிருந்து துளசி நேரே அவனைச் சந்திப்பதற்காக அறை வாசலில் வந்து இறங்கினாள். ஒரு டாக்வியிலிருந்து டில்லி நாகரிகம் அவள் கையில் பிணைத் திருந்த வானிடிபாக்"குடன் கீழிறங்கிய துளசியைப் பார்த்தவுடன் அவள் எப்போது டில்லியிலிருந்து வந்தாள்? ஏன் டாக்ளியில் வந்து இறங்குகிறாள்? ஒரு வேளை நேரே விமானத்திலிருந்தே இங்கு வருகிறாளா? என்றெல்லாம் சுகுணனின் மனதில் கேள்விகள் எழுந்தன. அவள் டாக்ஸி அபிவிருந்து கீழிறங்கி வந்தபோது அவனோ அறையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/197&oldid=590574" இலிருந்து மீள்விக்கப்பட்டது