பக்கம்:நெற்றிக்கண்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 நெற்றிக் கண்

"ஒரு நல்ல பத்திரிகை எதிர்காலத்தில் இனிமேல் நீங்க வில்லாமல் சீரழிந்து போகுமே என்ற கவலையால் அதற்கு உரிமையாளரின்மேகள் என்ற முறையிலில்லாமல், அதை இது வரை விரும்பி வாசித்தவள் என்ற முறையிலாவது தர்ன் வருந்தித்தானே ஆகவேண்டும்:

எவ்வளவுக்கு எவ்வளவு சீரழிகிறதோ அவ்வளவுக் கவ்வளவு நிறைய விற்பனையாகுமென்று அதை நடத்து கிறவர் எதிர்பார்க்கிறாரோ, என்னவோ? மனிதர்களைக் கூலிகளாகவே எதிர்பார்க்கிறவர்களிடம் உத்தியோகம் பார்ப்பதுபோல் பெரிய ஆயுள் தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது துளசீ!' - < -

இதற்கும் அவள் மறுமொழி கூறவில்லை. தரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்றாள். பையன் காபியோடு வந்தான். சுகுணன் அதை வாங்கி இரண்டு கிளாஸ்'களில் பகிர்ந்து ஊற்றி ஒன்றைத் தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை, "காபி சாப்படு துளசி' என்று அவளிடம் நீட்டினான். சிறிது தயங்கிய பின் அவள் அதை வாங்கிக் கொண்டாள். துளசி காபியை குடித்துக் கொண்டிருக்கும் போது அவன் அவளிடம் கூறலானான்;

"நாளை மாலை இரயிலில் நான் கோயம்புத்துார் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். தங்கையைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. இதுவரைதான் பத்தி ரிகை வேலை ஒய்வில்லாமல் இருந்து வந்தது. இப்போது நான் சுதந்திர மனிதன்...' . .

"என்னைப் பலவிதமான நினைவுகளிலும் வேதனை களிலும் சிறைப்படுத்தி விட்டு நீங்கள் உங்களைச் சுதந்திர மனிதரென்று சொல்லிக் கொள்கிறீர்களே: இது எத்தனை பெரிய கொடுமை?'-என்று காபி கிளாஸ்ை மேஜையில் வைத்துவிட்டுக் கேட்டாள் துளசி, -

"உணர்ச்சிகள் அவரவர் பாவனையைப் பொறுத்தவை துளசீ! இதிலிருந்து உனக்குக் கிடைக்கிற வாழ்க்கையை நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/200&oldid=590577" இலிருந்து மீள்விக்கப்பட்டது