பக்கம்:நெற்றிக்கண்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一念06 நேற்றிக் கண்

வரவும், வேறு 'பிரேம் வேண்டுமென்று மாறவும் வளரவும், இயல்பான ஆசை, துரண்டுதல்கள் எல்லாமிருக்கிறது. அந்த உறவினரை நினைத்து அவர் பரபரப்பாக விசாரித்த ஆர்வத்தையும், அவர் நினைத்த "பிரேமில் அவன் மாட்டப்பட்டிருக்கவில்லை என்றறிந்தும், அவர் புறக் கணித்துவிட்டு ஓடிய வேகத்தையும்-நினைத்துத் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான் ககுனன்.

சென்ட்ரல் நிலையத்திலிருந்து மறுபடி பஸ் ஏறி அவன் தம்புச்செட்டித் தெருவிற்குப் போனபோது -அந்தத் தெருவின் இருமுனைகளிலும் அங்கங்கே சுவர் விளிம்புகளில் அரசு முளைத்த சில பழைய கட்டிடங்கள், கிடங்குகளின் ஒரம் ஈச்சம்பாயை மூங்கில் கழியில் நட்டு அதற்குள்ளேயே இரவில் முடங்குவதும், பகலில் துரைமுகத்தில் முட்டை துாக்குவதுமாக வாழும் கூலிகளின் குடும்பங்களைப் பற்றிச் சிந்தனை வந்தது. இவர்கள் வாழ்வைப் பார்த்து வியக்கவும் வியக்காமலிருக்கவும் யாருமே இருக்க மாட்டார் கள் போலிருக்கிறது என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அதுதாபப்படவும் பட்டினத்து வாழ்க்கை வேகத்தில் இடமில்லை. வியக்கவும் வழியில்லை. ஒன்று பட்டணத்தில் தேவைக்கு மீறிக் கொண்டாடு கிறார்கள்? அல்லது அளவுக்கு மீறி அலட்சியம் செய்கிறார் கள். கொண்டாடுவதற்கும் அலட்சியம் செய்வதற்கும். நடுவிலுள்ள அவசியமான பல அளவுகள்-மதிப்பீடுகள் இங்கு இல்லை' என்றே நினைத்தான் அவன். W

'நேஷனல் டைம்ஸ் காரியாலயத்தின் படிகளில் ஏறி அவன் மாடிக்குச் சென்றபோது மகாதேவன் ஏதோ தந்தி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்ண்டு குறுக்கும் நெடுக்கு ம்ாக நடந்து கொண்டிருந்தார். சுகுணனைப் பார்த்ததும் முகமலர்ந்து வரவேற்ற அவர், - -

ஒரு காரியம் உங்களால் ஆகவேண்டும் சுகுணன்: தந்தி வேறு வந்துவிட்டது. இப்போது நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற இண்டஸ்டிரியல் சப்ளிமெண்ட்டிலேயே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/208&oldid=590585" இலிருந்து மீள்விக்கப்பட்டது