பக்கம்:நெற்றிக்கண்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2.13

ததை கொச்சி எக்ஸ்பிரஸ்.கோவை நிலையத்தில் புகுந்து நின்ற அந்தப் பூங்காலையில் எண்ணினான் சுகுணன். கீழே மங்கலாகத் தெரியும் நகரைவிட மேடான கோவை இரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நேரமும் அந்த நகரமும் மேற்கு நாட்டு நகரங்களுக்கு இணையாகத் தோற்றமளித் தன. அந்த மண்ணோடு எங்கோ ஒரு மூலையில் மறைந்து இளமை நினைவுகள் அவனுள் எழுந்தன. அங்கே வளர்ந் தது. வாழ்ந்தது. படித்தது. ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஆசைப்பட்ட பத்திரிகைத் தொழிலுக்கே தேர்ந்தெடுக்கப் பட்டுப் பத்திரிகைத் தொழிலுக்காக இதே போல ஒருநாள் சென்னைக்கு இரயிலேறியது எல்லாம் நினைவு வந்தன. இதே போலக் கொச்சியிலிருந்து சென்னைக்குப் போகும் எக்ஸ்பிரஸ் கோவை நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மாலையில் அவன் இரயிலேறியதும் இத்தனை ஆண்டுகள் சென்னை வாசியாயிருந்து வாழ்க்கையின் உச்சபட்சமான சூதுவாதுகளையும், நன்மை தீமைகளையும் தெரிந்து கொண்டு இன்று திரும்புவதும் ஞாபகத்தில் அலையாடின

கொங்கு நாட்டின் வெள்ளை மனம், "அப்ப வாரே னுங்க...என்பதுபோல் இழுத்து இழுத்துப் பேசும் கொங்கு நாட்டின் அன்பான உரையாடல் எல்லாம் அவனுள் மறந் திருந்தன; மறந்திருந்தன. இன்றோ மறுபடி நினைவு வருகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கச் சென்னையைவிடச் சிறந்த இடமில்லை. வாழ்க்கையை அநுபவிக்கவோ சென்னையில் இடமில்லை. டிரெயினிங் ஸ்கூல் படிப்புப்போல் தான் சென்னை வாசம். டிரெயினிங்" கிடைக்கிற இடத்திலேயே அதன் பலனை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. சுகுணன் கோவை: நிலையத்தில் இறங்கி நின்று நெட்டுயிர்த்தான். கீழே அகன்ற வீதிகளில் கோவையின் தேசீய வாகனங்களாகிய, ஆட்டோ ரிக்ஷாக்கள் விரைந்து கொண்டிருந்தன. தொலைவில் பஞ்சாலைப் புகைப் போக்கிகள் அங்கொன்

நெ-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/215&oldid=590592" இலிருந்து மீள்விக்கப்பட்டது