பக்கம்:நெற்றிக்கண்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 2.17

தற்கால இலட்சியம் கதைகளைப் படிப்பது, எதிர்கால இலட்சியம் யாராவது ஒரு நல்ல எழுத்தாளரைக் கணவ னாக அடைவது' என்று பவானி கேலியில் இறங்கினாள்.

"தற்கால இலட்சியத்தைப்பற்றி ஒன்றும் பயமில்லை. ஆனால் எதிர்கால இலட்சியம் தான் பயப்படும்படியாக இருக்கிறது’’ என்று சிரித்துக்கொண்டே சுகுணன் கூறிய போது ஹெட்கிளார்க் மகள் நாணி உள்ளே ஒடி விட்டாள்.

பகல் உணவுக்குப்பின் ஓரிரண்டு மணி நேரம் அமைதி -யாக உறங்க முடிந்தது. மூன்று மணிக்குப் பவானி வந்து அவனை எழுப்பி விட்டாள். %

'பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தின் சார்பில் இன்று நீ பேசவேண்டுமென்று ஹெட்மிஸ்ட்ரஸ் ரொம்ப வற்புறுத்து கிறாள். அண்ணா!’ என்றாள் அவள். . 'வந்த இடத்திலும் இதேது. பெரிய வம்பாகிவிட்டது' என்று தட்டிக் கழிக்க முயன்றான் அவன். பவானி வற்புறுத் தவே மேலும் மறுக்கத் துணிவின்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான் அவன். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியை, அசடுவழியச் சிரித்துக் கொண்டே, 'இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பத்திரிகையில் அவசி :யம். நீங்கள் ஏதாவது எழுத வேண்டும்,' என்று ஒரு புகழ் மீனுக்குத் தூண்டிலைப்போட்டு வைத்தாள். மாணவிகள் அவன் பேச்சை மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். அன்றிரவு அவன் பவானியோடு விடுதியிலேயே சாப்பிட் டான். பத்திரிகைத் தொழிலின் புகழிலும் ஒளியிலும் உள்ள அபாயம் அந்தப் புகழையும் ஒளியையும் அடியொற்றி வரும் பொறாமைகளையும், பகைகளையும் தாங்குவதுதான். தான் அடைந்தாற் போன்ற கோபதாபங்களையோ, சலிப்பு அலுப்புக்களையோ அடையாமல் பவானி அந்தப் பள்ளிக் கூடத்தில் பூப்போல் மலர்ந்து வாடாமல் மணம் பரப்பிக் கொண்டிருப்பதை எண்ணிச் சுகுணன் பூரிப்படைந்தான். இரண்டு நாள் அந்தச் சிற்றுாரிலே இருந்துவிட்டு-மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/219&oldid=590596" இலிருந்து மீள்விக்கப்பட்டது