பக்கம்:நெற்றிக்கண்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நெற்றிக் கண்

வருவதற்குக் கூட வடிவும் ஒழுங்கும் பெறாமல் மனத்தி: லேயே எழுதி மனத்திலேயே கிழித்தது தான் அதிகம். நாளைக்குக் காலையில் எழும்பூர் போய் இறங்கித். திருவல்லிக்கேணி சென்று அறையில் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டுக் குளித்துச் சிற்றுண்டி முடித்துக்கொண்டு. அலுவலகத்துக்குப் போனால் கம்போஸுக்கு மேட்டர் உண்டா சார்?- என்று ஆவலோடு கேட்கவரும். பூம்பொழில் அச்சகத்து ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடுவுக்கு என்ன பதில் சொல்வது? -

இதுவரை துளசிக்கு அடுத்தபடி சு குணன் எழுதும் எழுத்துக்களின் முதல் இரசிகர் இந்த நம்மாழ்வார் நாயுடு தான். அவன் மேலும் அவன் எழுத்துக்கள் மேலும் ஒரு தந்தையின் பாசத்தோடும் அன்டோடும் உரிமை கொண்க டாடிப் பேசுகிற நாணயமான தொழிலாளி அவர், சுகுனன் மிஷினில் ஏறிக் கொண்டிருக்கிற ஃபாரத்தில் வண்டி வண்டியாகக் கரெக்ஷன் போட்டுக் கொடுத் தாலும் நாயுடுவுக்குக் கோபமே வராது.

'இதென்னா புச்சா நம்பளுக்குள்ளே? வழக்கந்தானே சார் - என்று சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து: கரெக்ஷனை வாங்கிச் செல்வார் நாயுடு.

எழுதி எழுதிக் குவிக்கிற காகிதங்களைப் படித்துப் பாராட்டவும், "இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்' என்று: அபிப்ராயம் சொல்லவும் துளசி இனிமேல் வரமாட்டாள். பழைய காலத்தில் அரண்மனைகளில் அரசர்கள் உண்ணும்: உணவை அவர்கள் உண்பதற்கு முன்பாகவே உண்டு ருசியைப்பற்றி முதலிலேயே சோதித்துச் சொல்வதற்கு. உண்டு காட்டிகள் என்பதாக ஒருவகை ஊழியர்கள் இருப்பார்களாமே; அதுபோல அவனுடைய எழுத்தின் ருசியைச் சரிபார்த்து அவனுக்கே சொல்ல நம்பிக்கையான ஆள் இனி யாரும் இல்லை. இனிமேல் அவனுக்குப் பொறுப்பு அதிகம். தன் எழுத்தின் தரத்தை விலகி நின்று கொண்டு. தானே படைக்கிறவனாகவும் தானே படிக்கிறவனாகவும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/22&oldid=590388" இலிருந்து மீள்விக்கப்பட்டது