பக்கம்:நெற்றிக்கண்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 18 நெற்றிக் கண்

நாள் உதகமண்டலத்திற்குப் புறப்பட்ட போது பவானியும் இரண்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டு அவனோடு புறப் பட்டாள். . உதகமண்டலத்திற்குப் போகும் போதுதான் ‘பூம்பொழில் வேலையை உதறி விட்டதைப் பற்றித் தங்கையிடம் முதல்முதலாகத்தெரிவித்தான் அவன்.அவனை யும் அவன் பிடிவாதங்களையும் பற்றி நன்றாக உணர்ந். திருந்த பவானி, ஏன் வேலையை விட்டுவிட்டாய்?’’ என்று கேட்கவில்லை. இனிமேல் என்ன செய்வதாக, உத்தேசம்' என்று மட்டுமே கேட்டாள்-அதற்கு அவன் கூறிய பதிலும் உறுதியானதாக இருந்தது. - -

'யார் தன்னிடம் குற்றமற்றவனாய்ப் பிறருடைய குற்றங்களை எடுத்துக்காட்டுகிறானோ அவனை நோக்கிச் சமூகத்தின் நெற்றிக்கண்கள் திறக்கத்தான் செய்யும். குற்றம் செய்கிறவர்களின் நெற்றிக்கண் திறக்கிற அளவு: அவர்களைக் கெர்திப்படையச் செய்ய முடியாத எழுது, கோல் வெறும் மரக்கோல்தான். என் எழுதுகோல் மரக் கோலாயிருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப் போவ தில்லை; சொற்களை அணிவகுத்து நிறுத்திப் போராடுகிற வன் வெற்றிபெற நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் அவன் ஆயுதங்கள் பொருள் தெளியப் பொருள் தெளியப் பலமடைகின்ற வார்த்தைகளாக நிற்கின்றன, என்று. அவன் கூறிய மறுமொழி மிகவெளிப்படையாக அவளுக்குப் புரியாவிட்டாலும் அதில் ஒரு திடமிருப்பதை அவள் உணர்ந்: தாள். .

"சத்தியமங்கலத்து மாமா உன் ஜாதகம் எங்கிருக்கிற, தென்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கேட்டுவிட்டுப் போகிறார்?' என்று அவனுடைய திருமணத்தைப் பற்றி மெல்ல அவனுக்கு நினைவூட்டினாள் பவானி.

"வெட்கப்படாமல் அவரிடம் உன் ஜாதகத்தை முதலில் குறித்துக் கொடு பவானி!' என்று நாணத்தினால் சிவக்கும். அவள் முகத்தை ஏறிட்டுப்பார்த்தபடி மறுமொழி கூறினான் சுகுணன். ". . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/220&oldid=590597" இலிருந்து மீள்விக்கப்பட்டது