பக்கம்:நெற்றிக்கண்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 名绍辽

"எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?' சதா காலமும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிற-இருக்க வேண்டிய இந்தக் கேள்வியை இரயில் பயணத்தின் போது மட்டும் கேட்டுப் பார்த்துக் கொள்கிறோமா என்ன? மனத்தி னால் போவதும், வருவதும், தங்குவதும் கூடப்பிரயாணங் களானால் மனிதன் பிரயாணத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றாகிவிடும். அப்படி ஆகுமானாலும் அது ஒரு தத்துவம்தான். சுகுணன் அமர்ந்திருந்த அந்தப் பெட்டி யில் மொத்தம் ஏழுபேர் இருந்தனர். மூவர் பெண்கள். நாலு ஆண்களில் சுகுணனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த தடுத்தர வயதுக்காரர் ஒருவர் இரயிலில் இவன் ஏறி உட்கார்ந்த விநாடியிலிருந்து-அவனை உற்று உற்றுப் பார்ம் பதும்-ஏதோ கேட்க நினைப்பவர் போல் தயங்குவதுமாக இருந்தார். சுகுணன் அதைக் கவனித்தாலும். அவராகக் கேட்கட்டுமே என்று இருந்தான். இரயில் விரைந்து நகரத் தொடங்கியதும் அவராகப் பேச்சைத் தொடங்கினார்.

'......நீங்கள்...... தொகுதி எம். எல். ஏ. அல்லவா?: என்று அவர் வினாவியபோது ஒரு விநாடி திகைத்தபின், 'இல்லை நான் எந்தத் தொகுதி எம். எல்.ஏ.யுமில்லை’என்று மறுத்தான் சுகுணன். அப்படியும் அவர் விடவில்லை.

- 'மன்னிக்க வேண்டும். தயவுசெய்து நீங்கள் யாரென்று தான் அறிந்து கொள்ளலாமா?' என்று இப்படி விசாரிக்கும் விசாரணைக்கு ஆங்கிலம்தான் நாகரிகம் என்று கருதினாற் போலத் தமிழிலேயே பேசிக்கொண்டு வந்தவர் இதை மட்டும் ஆங்கிலத்தில் விசாரித்தார். சுகுணன் ஆங்கிலத் திலேயே அவருக்கு மறுமொழி கூறத் தொடங்கிய தோடன்றித் தொடர்ந்து பேசிய போதும் சரமாரியாக ஆங்கிலத்தைத் தொடுத்த போதும் அவர் ஆற்றாமையோடு தம்முடைய தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார். இரயிலிலோ பஸ்ஸிலோ, விமானத்திலோ, பயணம் செய்யும்போது சராசரி இந்தியன் அடுத்தவனுக்குச் சுதேசி மொழி தெரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/223&oldid=590600" இலிருந்து மீள்விக்கப்பட்டது