பக்கம்:நெற்றிக்கண்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 231

யோடு, ஆசிரியர் ரொம்ப நல்லவங்க. திடீர்னு போயிட் டாரு நாளைக்கு இந்தப் பேப்பர் வருமோ வராதோ?.. இதைத்தான் வாங்கிப் படிப்பேனின்னு பிடிவாதமாக இருக்கிறவங்க இனிமெ சங்கடப்படுவாங்களேன்னு கவல்ை யாயிருக்குது’’-என்றான் கடைக்காரன்.

அதைக் கேட்டுக் கொண்டே வாடகைக்காரை நோக்கி நகர்ந்தான் சுகுணன். கார் மறுபடியும் புறப்பட் .டது. ஐஸ்ஹவுஸ் பக்கம் திரும்பி மகாதேவனின் வீட்டுக்கு முன்கார் நின்றபோது-அவர் நீத்துச் சென்ற குடும்பத்தின் கவலையும்-அதைவிடப் பெரிய குடும்பமான இதைத்தான் வாங்கி படிப்போமென்று பிடிவாதமாக டைம்ஸை வாங்கிப் படிக்கும் நல்ல வாசகர் குடும்பத்தைப் பற்றிய கவலையும் சேர்த்தே சுகுணனை வாட்டின. வீட்டு வாயிலில் கூட்டம் கூட்டமாக யார் யாரோ நின்றார்கள். சுகுணனைப் பார்த் ததும் மகாதேவனின் மனைவி கோவென்று கதறியழத் தொடங்கிவிட்டாள். குழந்தைகள் வயது வந்த பையன், பெண் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கப் பரிதாபமா அயிருந்தது. வேதனை மிகுதியில் சம்பிரதாயமாகத் துக்கம் விசாரிப்பதற்குத் தேவையான சாதாரணச் சொற்கள்கூட அப்போது அவனுக்குக் கிடைக்கவில்லை. வாயிற்புறம் பத்து நிமிடத்துக்கு ஒருதரம் அனுதாபத் தந்திகளைக் கையெழுத் திட்டு வாங்கிய வண்ணம் இருந்தார்கள். துக்கத்துக்கு வருவோர் போவோர் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பிரதாயமான துக்கத்தை ஒரு வழியாகக் கேட்டு முடித்த பிறகு, ஆபீஸ்ை யார் கவனிக்கிறார்கள்? அடுத்த வாரம் வெளியிட வேண்டிய இண்டஸ்டிரியல் ஸ்ப்ளிமெண்ட் அரைகுறையாக இருக்குமே...' என்று மெல்ல விசாரித் தான் சுகுணன். ---

- ஆபிஸ்" என்ன வேண்டிக் கிடக்கிறது? பாழாய்ப் போன ஆபீஸ்தானே அவரை இப்படி வாரிக் கொண்டு போயிற்று. இதற்காக இரர்ப் பகலாக உயிரை விட்டு -உயிரைவிட்டுத்தான் இப்படியாச்சு...'ட் என்று அந்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/233&oldid=590610" இலிருந்து மீள்விக்கப்பட்டது