பக்கம்:நெற்றிக்கண்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 245

தில் மீதமிருந்த கையிருப்புப்பணம் இருநூறு இருநூற்றைம் பதுக்குள்தான் அடங்கியது. என்ன செய்வது என்ற திகைப் பும் கவலையும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் முகத்திலும் இருந்தது. நேஷனல் டைம்ஸ்' போன்று ஏழைப்பத்திரி கைக்குத் திடீர்ென்று இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்து கொள்ள ஒரு வசதியும் இருக்கவில்லை.

காரியாலயத்தைச் சேர்ந்த அனைவரும் இதை எண்ணி மலைத்துத் தயங்கியிருந்த வேளையில் சுகுணனே தள்ளா டியபடி எழுந்திருந்து தன் மேஜையருகே வந்து நாற்காலி யில் உட்கார்ந்தான். போர்மெனைக் கூப்பிட்டு வாராந்தர சப்ளிமெண்ட்'க்கு ஸ்டிரைக் ஆர்டர் பேர்டுவது பற்றி விசாரித்தபோது எதிர்ப்புறம் நிலவிய தயக்கத்திலிருந்தே. "நியூஸ்பிரிண்ட் காகிதம் இல்லை என்பதைக் குறிப்பாகப் புரிந்து கொள்ள முடிந்தது அவனால். - ... ".

இந்த வாரம் மட்டும் ஸ்ப்ளிமெண்ட் இல்லைன்னும் போட்டுப்பிட்டு நியூஸ் பகுதியை மட்டும் முடிஞ்சவரை அடிச்சிவிட்டுடலாம் சார்' என்று ஃபோர்மென் கூறிய யோசனையைச் சுகுணனால் ஏற்கமுடியவில்லை. நண்பர் கள் யாரிடமாவது கடன் கேட்கலாமா என்று சிந்தித்துட் கமலத்தை உள்ளே அழைத்தான் சுகுணன். டெலிபோனை எடுத்து டயல் செய்யவும் அவன் கைகளில் ஆற்றல் இல்லை. கமலத்திடம் இரண்டு டெலிபோன் நம்பர்களைச் சொல்லி டயல் செய்து அவர்கள் கிடைத்தால் தன்னிடம் கொடுக்கச் சொல்லி வேண்டினான் சுகுணன். அவன் கூறிய எண்ணுக்கு டயல் செய்வதற்காகக் கமலம் ஃபோனை நெருங்கிய போது அப்படிச் செய்ய முடியாமல் யாரோ கூப்பிடுகிற ம்ணி அடித்தது. கமலமே எடுத்தாள் அடுத்த கணம். அண்ணா யாரோ துளசியாம்...'-என்று அவள் டெலிபோன்ன அவனிடம் நீட்டியபோது-"உடம்பு சரியில்லையாம், அப்புறம் பேசுங்கன்னு-சொல்லி வைத்துவிடு' என்றirள் சுகுணன். அப்போதுள்ள துன்பமான நிலையில் அவன் துளசியைப் பார்க்கவோ பேசவோ விரும்பவில்ல்ை:

நெ-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/247&oldid=590624" இலிருந்து மீள்விக்கப்பட்டது