பக்கம்:நெற்றிக்கண்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 - நெற்றிக் கண்

வருவேனென்று எனக்கே தெரியாது...' துளசி விடைபெற: முயன்றாள். - -

கொஞ்சம் உட்கார்! போகலாம்... உன்னோடு சிறிது பேசவேண்டும்போல் தாகமாயிருக்கிறது...' என்றான் சுகுணன், - -

"நீங்கள் சிறிது பேச விரும்பும் இதே தாகம்-நான் வாழ்நாள் வரை தவிக்க வேண்டிய ஒன்று என்பது ஞாபக மிருக்கட்டும்.’’ என்று கூறிக்கொண்டே எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் துளசி.

"துளசி? உன்னை நான் முன்பு கடுமையாகப் பேசியிருக் கும் சில வார்த்தைகளுக்காக நீ என்னை மன்னிக்க வேண் டும். ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர் களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஒர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய்ப் போய் விடுகின்றன? அதையும் ஒரு நிறைவாக ஒப்புக் கொள்கிற திருப்தியை இப்போது நீ எனக்கு நிரூபித்து விட்டாய். ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசை தான். ஏனென்றால் அந்த நிராசை என்ற எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்ப தில்லை. திருப்தியில் ஆசை நெருப்பு நீறுபூத்து அவிந்து போய்ச் சாம்பலாகிக் குவிந்து விடுகிறது. நாமோ இப்போது பரிபூரணமாக நிராசையோடு எதிரெதிரே நிற்கிறோம். நம் முடைய இந்தத் தாபம்-இந்த ஆசை நெருப்பு என்றும் அணையவே அணையாது, ஆசையின் முடியாத எல்லை நிராசைதான் என்று எனக்கு இப்போது நன்றாக விளங்கு கிறது. நிராசைதான் மனிதனை மயக்குகிறது. இல்லையா - னால் நிராசையில் முடிந்த அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு கதைகளில் மட்டும் ஏன் அத்தனை கவர்ச்சி உண்டாகவேண்டும்? தாபம், நிராசை, அதிருப்தி, குறைவு, தாகம் என்பனபோல் நிறையாத மூளியான உணர்வுகளால் தான் மனிதன் தன்னுடைய சொர்க்கத்தைத் தேட வேண்டு மென்பது கடவுளின் சித்தம் போலிருக்கிறது." -

  • = = ی ** ه = و »۰۰ه. ب: ;:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/258&oldid=590635" இலிருந்து மீள்விக்கப்பட்டது