பக்கம்:நெற்றிக்கண்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 57

" நீ ஒரு பூமாலை-என்று நீண்ட நாட்களுக்குமுன் ஒருமுறை உன்னிடம் கூறினேன்; நினைவிருக்கிறதா? துளசி... * ...' . . -

நினைவில்லாமலென்ன? வீரர்களின் கம்பீரமான

தோள்களை அலங்கரிக்கவேண்டியமணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்’-என்று பின்னால் அதையே. மாற்றி எழுதி எனக்கு வாழ்த்து அனுப்பினர்களே? அதுகூட நினைவிருக்கிறது."

'தயவு செய்து இப்போது அதை மறந்துவிடு துளசி.

"எப்பொழுதோ படைத்த சொற்கள் நாம் அழிக்க, முயன்றாலும் அழிவதில்லை. மனிதர்களின் முன்னோர்களில் யாரோ சிலர் சொற்களுக்கு உண்டாக்கி வைத்த மந்திர, சக்தி இன்னும் அவைகளில் இருக்கிறது. வசை சுடுகிறது. புகழ் குளிரச் செய்கிறது. புகழ் மறந்தாலும் வசை மறப்ப தில்லை...அது சொல்லின் சக்தி போலும்...' -

"நான் வசையாக எதுவும் உனக்கு எழுதவில்லை. என்னுடைய வசையிலும்-என் அன்பின் தொனி இருப்பதை நீ உணர்ந்திருக்கலாம்...' o - -

உங்கள் சொற்களில், அன்பை உணர்ந்ததைவிட - வேதனையைத்தான் நான் அதிகமாக உணர்ந்தேன். அதற். காகவும் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், "சாதாரண மனிதர்களின் வேதனைதான் அவர்களுக்குத் தவம். எல்லாராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள்படுகிற துன்பங்களே அவர்கள் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி நான் செய்த தவம் இன்று பலித்திருக்கிறது...'

"உண்மை! நாம் மனிதர்கள். பலவீனமான நம் அதிருப்திகளுக்கிடையேயும் அன்பினால்தான் நிமிர்ந்து நடக்கிறோம். வெளிப்படையாக் உன்னிடம் பலமுறை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/259&oldid=590636" இலிருந்து மீள்விக்கப்பட்டது