பக்கம்:நெற்றிக்கண்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 . நெற்றிக் கண்

'மறுக்கவில்லை, என்னைத் துரத்தும் காதல் பறவை. பின் சிறகுகள் அவ்வளவிற்கு வலிமையானவை என்று. உணர்ந்து அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்."

நன்றி வேண்டாம். அது என்னை அந்தியமாக்குகிறது. அன்பு செய்யுங்கள். போதும். நான்.உங்களிடம் ஒப்படைத் திருக்கும் என் மனத்தை நீங்கள் விட்டுவிடாமல் பேணி னாலே எனக்குத் திருப்திதான்.' -

-அவன் அவளை வழியனுப்புவதற்காகப் படியிறங்கி வாயில் வரை சென்றபோது அப்போதுதான் நியூஸ்பிரிண்ட். ரீல்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. உள்ளே மெஷின் ஒடும் ஓசை கடமுடவென்று எழுந்தது.

எதிர்ப்புறம் ஒரமாகப் பார்க் செய்திருந்த காரருகே அவள் சென்றாள். சுகுணன் அவளை விட்டுப் போக மனம் வராமல் இன்னும் வாயிற்படியிலேயே நின்று கொண்டிருந்: தான். காருக்குள் ஏறி உட்கார்ந்தவள் ஏதோ நினைத்துக் கொண்டாற்போல் மறுபடி கதவைத் திறந்துகொண்டு. இறங்கித் தயக்கத்தோடு நடந்து அவனருகே வந்தாள். r "என்னை மறந்துவிட மாட்டீர்களே...? கேட்கத் தொடங்கியவள் விம்மிக்கொண்டு வரும் அழுகையை உள். ளேயே அடக்க முயல்வது குரலில் தெரிந்தது, சுகுணனின் இதயத்தை வேதனை பிசைந்தது. இத்தனை பெரியபிரிவாற்றாமை அவன் நெஞ்சை இதுவரை சுமையாக அழுத்தியதே இல்லை.

"அசடே! பைத்தியும் போல இப்படித் தெருவில் அழ. லாமா? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரண மாக ஒப்படைத்துவிட்ட ஒருத்தியின் உடம்பை யார் மணந்து கொண்டால்தான் என்ன? உண்மையில் அந்த தம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவர் அந்த மனத்தை ஆள் கிறான். என்னை நம்பு. கவலையின்றிப் போய் வா!' 鹰 இதயபூர்வமாக நோன்பியற்றுகிற வரை என் எழுத்திலும், இந்தப் பத்திரிகையிலும் இலட்சுமீகரம் குறையவே குறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/262&oldid=590640" இலிருந்து மீள்விக்கப்பட்டது