பக்கம்:நெற்றிக்கண்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 盛岛嘉

கார்ப்பு, புளிப்பு, உப்பு இவைகளைப்போல் அன்பும் தவிர்க்க முடியாத ருசிகளில் ஒன்றாக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம்மேல் வைக்கிற-பிரியம், அன்பு, அதுதாபம், ஆதரவு-இவை யெல்லாம்கூட வாழ்க்கையில் மனிதன் கண்டுவிட்ட மனக் தின் உணர்ச்சி பூர்வமான ருசிகள். இந்த நீண்டகால ருசி களை அத்தனை சுலபமாக மனிதனால் மறந்துவிட முடியாது போலிருக்கிறது ! சொல்லப் போனால் நாவின் ருசிகளைவிட இந்த மனத்தின் ருசிகளுக்குத்தான் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் உண்டு என்பது நிரூபண மான உண்மையாகத் தோன்றியது. ‘. . . . . .

மனித மனத்தின் இந்த ருசிகளில் எப்போதும் தேவை :யானவையும் எப்போதும் விரும்பப்படுகிறவையுமான சில

நியாயமான ருசிகளைப் பொருளாகக் கொண்டுதான் உலக மகாகவிகளின் காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டிருக் கின்றன, நாவின் ருசிகள் மனித வாழ்வின் தேவையை மட்டுமே படைக்கின்றன. மனத்தின் ருசிகளோ-அவைதான் மனித வாழ்வையே அந்தப் பெயருக்குரிய கெளரவத்துடன் செம்மையாக உருவாக்குகின்றன. . -

அன்பிலும், கருணையிலும் ருசிகண்டு ருசிகண்டு வளர்ந் தவன் சுகுணன். தான் இன்னொருவரைச் சூழும்போதே அன்பு வெள்ளமாக நெருங்கிச் சூழ்ந்து பெருக வேண்டு மென்று நினைக்கிற சுபாவம் அவனுடையது. தன்னைச் சூழ் கிறவர்களும் அப்படியே சூழவேண்டுமென்று நினைத்துத் தவிக்கிற மலர்மனம் அவனுடையது. கடந்த சில நாட் களாக அந்த மனம் ஏமாற்றத்தால் இறுகிக் கடுமையாகி. யிருந்தது. கொதிப்படைந்திருந்தது. விரக்தியுற்றிருந்தது.

。崇 :: - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/27&oldid=590393" இலிருந்து மீள்விக்கப்பட்டது