பக்கம்:நெற்றிக்கண்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நெற்றிக் கண்

விருந்து நேர் கிழக்கே ஒடி இடது பக்கம் திரும்பிப் பாலம் ஏறி இறங்கி அப்புறம் வலதுபுறம் மூர்மார்க்கெட், சென்ட்ரல் நோக்கி ஓடத் தொடங்கிய பிறகுதான்பக்கங்களில் பார்த்துப் பரபரப்போடும் பதற்றத்தோடும் வழிமாறிவிட்டதை உணர்ந்து - டிரைவருக்கு அறிவிக்கத் தோன்றியது. அதன் விளைவு - கோட்டை நிலையம் போய் - அப்புறம் - போர் நினைவுக் கட்டிடம் (வார் மெமோரியல்) மெரீனா எல்லாம் சுற்றிச் சுங்குவார் தெரு வழியே - திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குப் போய் நின்றது டாக்சி. -

வாடகையைக் கணக்குத் தீர்த்து டாக்சியை அனுப்பி 'விட்டுப் பெட்டிப் படுக்கையோடு படியேறி மாடிக்குப் போனான் சுகுணன். கையிலிருந்த சாமான்களை அவன் கீழ்ே வைத்து விட்டுச் சாவியை எடுத்துத் தன் அறையைத் திறந்தபோது - பக்கத்து அறைக்காரருக்குத் தபால்காரர் எக்ஸ்பிரஸ் டெலிவரி கடிதம் ஒன்றைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, 'இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய அந்த மண வாழ்த்துக் கடிதமும் சாதாரணத் தபாலில் - துளசிக்குக் கிடைக்கும்' - என்று நினைத்துக் கொண்டான். அவன் அவளுக்கு எழுதியிருக்கும் அந்த வாக்கியங்கள் மறுபடி ஒவ்வொரு சொல்லாக அவனுக்கு நினைவு வந்தது.

வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய மண மாலை சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் கைகளில்...'

காரியாலய முகவரிக்கு எழுதாமல் அறை முகவரிக்கே வழக்கமாக எழுதும் இரண்டொரு நெருங்கிய நண்பர் களின் கடிதங்கள் கதவிடுக்கு வழியாகப் போடப்பட்டுக் கிடந்தன. அதில் ஒரே ஒரு கடித உறை மட்டும் தபால் தலையோ, முத்திரையோ, எதுவுமில்லாமல் - கனத்த உரையின்மேல் சுகுணன் அவர்கள், அறை எண் 9. கண்ணப்பா லாட்ஜ், பெரிய தெரு, சென்னை-5' - என்று சுத்தமாகத் தமிழில் முகவரி டைப் செய்யப் பெற்றதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/30&oldid=590396" இலிருந்து மீள்விக்கப்பட்டது