பக்கம்:நெற்றிக்கண்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J.O நெற்றிக் கண்

அவளுடைய அந்த டைப் செய்யப்பட்ட கடிதத்தை அப். படியே தனியாக எடுத்து வைத்துக்கொண்டு தபாவில் வந்து கிடந்த மற்றக் கடிதங்களை எடுத்துப் படிக்கலா னான் சுகுணன்.

அந்த ஆண்டு பி. இ. என். மகாநாடு டெல்லியில் நடக்கப் போவதாகவும் அதற்கு அவன் அவசியம் வர வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து நண்பன் மணி எழுதி யிருந்தான். இந்த முறை அகில இந்திய உழைக்கும். பத்திரிகையாளர்களின் பெடரேஷன் சென்னையில் கூடு வதற்கு அவனால் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று கல்கத்தாவிலிருந்து கோஷ் கேட்டிருந். தார். இன்னொரு கடிதம் கிராமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கும் அவனுடைய சகோதரியிடமிருந்து வந்திருந்தது. . . . . . .

படித்துக் கொண்டிருந்த கடிதங்கள் எல்லாம் படிக் காமல் ஒதுக்கி வைத்துவிட்ட ஒரு கடிதத்தையே பலமாக வும் அவசரமாகவும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. ஒரு காரியத்தை முதலில் செய்துவிடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான் அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக் கிறோம் என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்தபடியே முதலில் செய்யும் மற்றக் காரியங்களை வேகமாகச் செய். வதும் முழு வாக்கியத்தின் அர்த்தம். நாமே பாவனையாகக் கற்பித்து அதன் முடிவில் போட்டு வைக்கிற ஒரு கடைசிப் புள்ளியில் போய் முடிவையும் முடிந்துவிட்ட நிரூபணத். தையும் பெறுவதுபோல் கடைசியாகச் செய்ய வேண்டு, மென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங், களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகி, விடுகிறது. துளசியின் கடிதத்திற்கும் இப்போது அப்படி ஒரு சிரத்தை தானாகவே அவன் விரும்பா விடிலும், உண்டாகியிருந்தது. - - * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/32&oldid=590398" இலிருந்து மீள்விக்கப்பட்டது