பக்கம்:நெற்றிக்கண்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45

துறுத்தது. இங்கே வராதே-என்று மட்டும் கூறினால் அப்படி மறுத்துக் கூறுவதையே ஒரு தீவிரக் கோபமாக எடுத்துக் கொண்டு அவள் கட்டாயம் வந்துவிடுவாள் என்றெண்ணி அதற்கு ஒரு மாற்றாகத் தான் நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்’என்று அவன் கூற விரும்பினானே தவிர உண்மையில் இன் னொருவனுடைமை ஆகிவிட்ட அவளைச் சந்திக்கவோ பேசவோ அவன் நிச்சயமாக விரும்பவில்லை. அதற்காக அவளே தேடி வரும் போது-அவளுடைய தந்தையின் சொந்தக் காரியாலத்திலேயே உள்ளே நுழையாதே" என்றோ தயவு செய்து வெளியே போ-என்றோ அவ வரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டு துரத்தவும் வெறுக்கவும் கூட அவனால் முடியாது. அவள் வருகிற போது காரியாலய அறையில் தான் மட்டும் தனியே இருப் பதை விட வேறு யாராவது தன்னுடன் கூட இருப்பது நிலைமையைச் சமாளிப்பதற்கும் வசதியாயிருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. சில தினங்களுக்கு முன்வரை தன் அன்புக்கும். அதிகாரத்துக்கும், எழுத்தாற்றலுக்கும் அடிமைபோல் மயங்கி வசியம்ாகியிருந்த ஓர் அழகியை இன்று இந்த விநாடியில் தன்னிலிருந்து அந்நியமாகவும் வேற்றுமையாகவும் பிரித்து நினைப்பதற்கு என்ன காரண மென்று நிதானமாகச் சிந்திக்கக்கூட இப்போது அவன் 'நெஞ்சில் அவகாசமில்லை.

அடுத்தவார அட்டைப் படத்துக்கு எதை வரையலாம் என்று கலந்து பேசுவதற்காகச் சித்திரகாரர் சிவன் வந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அங்கு வந்து விட்டால் நல்லதென்று கருதியவனைப் போல் அவரை நிறைய நேரம் உட்கார்த்திப் பேசவைக்க முயன்றான் சுகுணன். அதுவும் முடியவில்லை. அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேறு ஏதோ காரிய

மிருக்கிறதென்று போய் விட்டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/47&oldid=590413" இலிருந்து மீள்விக்கப்பட்டது