பக்கம்:நெற்றிக்கண்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நெற்றிக் கண்

போட்டு முடிந்ததும் நவநாகரிகப் பூச்சூடலாகிய வார்த்தை மலர்களைச் சொற்பொழிவுகளாகத் தொடுத்துப் பேசு வதும் தவிர்க்க முடியாதவை என்பதை அவன் அறிவான். ஆயினும் தனக்கு வேதனை தரக்கூடிய அந்த வாய்ப்பைத் தட்டிக்கழிக்க முயலும் முயற்சியினாலேயே அவன் அப்படிப் பேசினான். அவர்களோ விடவில்லை. கடைசியாக இன்னொரு சாக்கைச் சொல்லித் தப்பிக்க முயன்றான் அவன்.

'இந்த மாதிரி விருந்துக்கும், திருமண வாழ்த்துக்கும் வேறு யாராவது வயதானவர்கள் தலைமை வகித்தால் நன்றாயிருக்குமே? நீங்கள் காலை மலர் ஆசிரியர் சர்மாவையோ டைம்ஸ்’ நாயரையோ கூப்பிட்டால் என்ன?- - o

"அதெப்படிங்க? நாங்கள் உங்களைத்தான் கூப்பிட றோம். நீங்களே வந்தாத்தான் நல்லாயிருக்கும்.'

சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையிலிருந் தான் சுகுணன். இதற்கு மேலும் பிடிவாதமாக அதிலிருந்து தப்ப முயலுகிற கோழைத்தனத்தை அவன் செய்யவில்லை. திருமண விருந்துக்குத் தலைமை வகிப்பதாக ஒப்புக்கொண்டு அவர்களை அனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் காரியாலயத்தில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மறுபடி அவன் அறைக்கு வந்தாள். துளசி. வந்தவள் ஆர்வத்தோடு அவனிடம் ஒன்று வேண்டினாள் :

"உங்கள் தொடர்கதையின் அடுத்த வாரப்பகுதி கை யெழுத்துப் பிரதியாயிருந்தாலும், அச்சான ஃபாரமாயிருந்

தாலும் உடனே எனக்குப் படிக்க வேண்டும்...'

'வெளிவர வேண்டிய பாரம் அச்சாகிவிட்டது. ஆனால் அச்சான பாரம் இங்கு எடுத்து வைக்கவில்லை. அதற்கும் அடுத்த வாரத்துக் கதைப் பகுதியை நானே. இன்னும் எழுதவில்லை. . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/66&oldid=590434" இலிருந்து மீள்விக்கப்பட்டது