பக்கம்:நெற்றிக்கண்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 65

"இதென்ன? எப்போது இந்த டீ டவராவைக்கொண்டு வந்து வைத்தார்கள்? குடிக்கவே இல்லையா? மறந்து விட்டதா?’ என்று அவன் மேஜைமேல் கவனிக்கப்படாமல் ஆறிப்போயிருந்த தேநீரைக் காண்பித்துக் கேட்டாள் துளசி. - .

"மறந்திருக்கும்! அதனால் என்ன இப்போது?' என்று. அலட்சியமாக அந்த டவரா-டம்ளரை எடுத்து ஜன்னல் வழியே, ஏதோ ஒரு வெறுப்போடு அதிலிருந்து தேநீரை வெளியே ஊற்றினான் சுகுணன். அவனுடைய அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள் :

'காண்டீன் பக்கமாகப் போய் பையனைச் சூடாக வேறு தேநீர் கொண்டுவரச் சொல்லட்டுமா?’’

"எனக்கு வேண்டியதில்லை, ஒருவேளை உனக்குத் தேவையானால் சூடாக வரவழைத்துக் கொள்ளலாம்...'

- "இப்போது எனக்குத் தேவை தேநீர் அல்ல. உங்கள் தொடர்கதையின் வெளிவரப் போகும் பகுதிதான் வேண்டும்...' -

"ஃபோர்மெனிடம் கேள் 1 தருவார்.’

முன்பெல்லாம் அச்சான முதல் ஃபாரத்தை அவளுக் காக அவன் எடுத்து வைத்துக் கொடுப்பது வழக்கம். இன்று. அப்படிச் செய்யவில்லை. அவளே விரைந்து போய் ஃபோர்மெனிடம் அந்த ஃபாரத்தை வாங்கி வந்தாள். அப்போது மாலை மணி ஐந்து இருக்கும். அவள் வீட்டிற்குப் போய் வருவதாக விடைபெற்றபோது அவன் அமைதியாக விடை கொடுத்து அனுப்பினான். எப்போதும் ஆதரவாக வாசல் வரை-கார்க் கதவு வரை போய் அனுப்புவது வழக்கம். இன்று அதையும் செய்யவில்லை. செய்ய முடியாது, செய்வதும் நன்றாயிராது. ஆனால் செய்யும்படி ஒரு நிர்ப்பந்தம் சேர்ந்தது. அவள் அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் அறையில் டெலிபோன் மணி அடித்தது. "துளசி இருந்தால் சிக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/67&oldid=590435" இலிருந்து மீள்விக்கப்பட்டது