பக்கம்:நெற்றிக்கண்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நெற்றிக் கண்

உணரும் வேளைகளில் நிறையக் கடிதங்களை எழுதி முடித்தது போலத் தோன்றும்.

மிகவும் குறுகலான பெரிய தெரு என்ற சிறிய வீதியில் இரவும் மனிதர்களும் கவிந்து உலாவத் தொடங்கி விட்டனர். - -

நாலுவீடு தள்ளியிருந்த மெஸ்ஸிற்குப் போய் இரவு உணவை முடித்துக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பி னான். அறைக்குள் வசதிகளுக்குப் பஞ்சமானாலும் காற்றுக்குப் பஞ்சமில்லை. படுக்கையில் புரண்டபடி நீண்ட நேரம் எதை எதையோ தொடர்புடனும் தொடர்பின்றி யும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டு அயர்ந்து உறங்கிப் போனான். சுகுணன். * -

மறுநாளும் அதற்கடுத்த நாளும், பத்திரிகை வேலை களில் மூழ்கினான் அவன். நடுவில், படங்கள் சரியாக விழாததனால் திருமணப் புகைப்படங்கள் எதையும் போட வேண்டாமென்று' துளசியே அபிப்ராயப்படுவதால் அப்படியே விட்டு விடுவது நல்லதென்று, பத்திரிகை அதிபர் நாகசாமி அவனுக்கு ஃபோன் செய்து தெரிவித்தார். அவளுடைய திருமணப் படத்தை முதல் பக்கத்தில் பார்டர் கட்டி போட வேண்டுமென்று அவர் தனக்குக் கட்டளை யிட்டபோது கடமையை ஏற்று எப்படி அதை வரவேற்றுச் செயல்பட்டானோ, அதே போல இப்போதும் படத்தைப் போட வேண்டாமென்ற இந்தச் செய்தியையும் கடமை யுர்ணவோடு கேட்டுக் கொண்டான் அவன். ஆனால் இதெல் லாம் துளசி தனது மன வேதனையைத் தவிர்ப்பதற்காகச் செய்யும் காரியங்கள் என்பது அவனுக்கே புரிந்து தானிருந் தது. அவள் அலுவலகக்தில் தனக்கு முன்பே படத்தைக் கிழித்தெறிந்த போதும், வேறு நல்ல படம் தருவதாக ஃபோர்மென் நாயுடுவிடம் பொய் கூறிய போதுமே-இது. இப்படித்தான் நடக்குமென்று அவன் அநுமானம் செய்திருத் தான். கடைசியில் அது அப்படியே நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/70&oldid=590439" இலிருந்து மீள்விக்கப்பட்டது