பக்கம்:நெற்றிக்கண்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நெற்றிக் கண்

ஆழமான உணர்வுகள் உள்ளவனாக மனத்தினால் விலகி வாழ்வதும் ஒரு பலமா அல்லது பலவீனமா என்பதைப் பல சமயங்களில் அவனால் முடிவு செய்ய இயலாமலே போயிருக்கிறது. -

திருவல்லிக்கேணி பெரியதெரு கண்ணப்பா லாட்ஜ் என்பது சென்னை நகரில் பிரம்மசாரிகளை அடைத்துப் போட்டு வாடகை வாங்குகிற (அ) தர்ம சத்திரங்களில் ஒன்று. அறைகளுக்கு எல்லாவற்றுக்குமாகக் கிழக்குக் கோடியில் நான்கு பொதுக் குளியலறைகளும் நடுக் கூடத்தில் ஒரு பொது டெலிபோனும் கூட உண்டு. எல்லா அறைக்காரர்களுக்கும் வருகிற ஃபோன் கால்களை வந்து சொல்ல ஒரு பையன் லாட்ஜில் இருக்கிறான், அறை யிலிருந்து யாராவது வெளியே போன் செய்ய முடியாதபடி பெரும்பாலான நேரங்களில் டெலிபோனில் புளியங் கொட்டைப் பருமனுக்கு ஒரு சிறிய பூட்டுத் தொங்கும். லாட்ஜ் நடத்துகிறவருக்குக் கைலி ஏற்றுமதி வியாபாரம். இலங்கை, மலேயாவுக்குக் கைலி, லுங்கி ஏற்றுமதி செய்வது அவர் தொழில். அறைகளில் ஒன்று திருவாளர் கண்ணப்பா அவர்களின் கைலி ஏற்றுமதி அலுவலகமாக இருந்தது. -

கைலிகளுடன் சமயா சமயங்களில் கடத்தலாக வருகிற சிங்க்ப்பூர்க் கைக்கடிகாரங்கள், செண்ட் வகைகள், டெரிலின் ஷர்ட்டிங் துணிகள், டிரான்சிஸ்டர்கள் வியாபா ரமும் இரகசியமாக உண்டு. இந்தக் கடத்தல் வேலையில் ஈடுபடும் அழுக்கடைந்த பழைய கார்கள் நாலைந்து “லாட்ஜின் கீழே தெருவில் ஒரமாய் வரிசையாய் நிற்கும். அத்தனை கார்களையும் காணவில்லையானால் கள்ளிக் கோட்டைக்கோ, மங்களூருக்கோ, வேதாராணியத்துக்கோ, சிதம்பரத்துக்கு அருகில் கவரப்பட்டு என்ற கடற்கரைக்கோ, சரக்குக் கடத்திவர அத்தனை "ரதங்களும் புறப்பட்டுப் போயிருப்பதாக அர்த்தம். இந்தக் கள்ளக்கடத்தல் ரதங் களையும் இவற்றின் இரகசியப் போக்குவரவு இயக்கங் களையும் நடத்தச் சீவாத தலைமயிருடன் புலித்தலையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/82&oldid=590452" இலிருந்து மீள்விக்கப்பட்டது