பக்கம்:நெற்றிக்கண்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நெற்றிக் கண்

'விசேஷமாக எந்த அர்த்தமும் இல்லை என்பதுதான் அது." - - 'இல்லை! நிச்சயமாக நீங்கள் என்னை ஏமாற்றம் பார்க்கிறீர்கள். நீங்கள் சாதாரணமான அர்த்தத்தில் அந்த வார்த்தைகளை அங்கே சொல்லவில்லை; உங்க, ளுடைய வார்த்தைகளும் அர்த்தங்களும் எனக்கு நன்றாகத் தெரியும்...'

"அப்படியானால் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லையே! அதுதான் உனக்கே தெரிகிறதே...'

எதிர்ப்புறம் குரல் தேய்ந்து விசும்பல் ஒலி எழுந்தது. அழுவதைப் போன்றதோர் சோக இனிமை ஃபோனில் பெருகி இழைந்தது.

"அசட்டுப்பெண்னே! வீணாக மனத்தை அலட்டிக், கொள்ளாதே' என்று கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் டெலிபோனை வைத்துவிட்டான் சுகுணன். வீணை வாய்படைத்து அழுவதைப்போன்ற அந்த் இனிய குரலை.இன்னும் கொஞ்சம் கேட்கவேண்டுமென்று ஆசையா யிருந்தும் ஒரு பிடிவாதத்தைக் காப்பாற்ற முயலும் ஆண்மையின் கட்டுப்பாட்டோடு மனமின்றித்தான் போனை வைத்திருந்தான் அவன்; அதற்குப் பிறகு நாலைந்து நாள் துளசியை அவன் பார்க்கவில்லை. சுகுணனுக்கு எழுத ஒய்வும் அவசியமும் இருந்தது. நிறைய

அன்று வியாழக்கிழமை மாலை ராயவரத்தில் முன்பே ஒப்புக்கொண்டிருந்த அந்த வாசகசாலைக் கூட்டத்திற்குப் போனான் சுகுணன். அன்று காரியாலயத்தில் நிறைய வேலை இருந்ததனால் ஐந்தே முக்கால் மணிக்குமேல்தான் ஆங்கிருந்து அறைக்குத் திரும்ப முடிந்தது. காரியாலயத்தி லிருந்து அறைக்கு வந்த டாக்சியையே வெயிடிங்'கில் நிறுத்தி வைத்துவிட்டு, அவசர அசரமாகக் குளித்து, உடை மாற்றிக்கொண்டு அங்கிருந்து அதே டாக்சியில் ராயவரத்துக்கு விரைந்தான் அவன். ஏதோ ஒரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/86&oldid=590456" இலிருந்து மீள்விக்கப்பட்டது