பக்கம்:நெற்றிக்கண்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அத்தியாயம்

ஒருவர் க்கு மற்றொருவர் அர்ப்பணமாகிவிடுகிற கிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச் சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் என்றும் அவியாமல் உள்ளேயே கணிகிறது.

'இந்த நூற்றாண்டின் இந்தத்தலைமுறையில் காரண் காரியங்களைச் சிந்திக்காமலே விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற கெட்ட வழக்கம் தமிழ் மக்களை எப்படி யோ எப்போதோ நோய்போலப் பற்றிக் கொண்டுவிட்டது. அவசரமாக வெறிகொண்டது போல் மேல்விழுந்து வலிய விரும்புகிறார்கள். அதே அவசரத்தோடு வெறிகொண்டது போல் மேல் விழுந்து வலிய வெறுக்கிறார்கள். விருப்பு வெறுப்புக்களுக்கு அடிப்படை நியாயம் ஒன்றும் கிடையாது. லெள்ளப் பெருக்கில் தத்தளிப்பவர்கள் கைக்குக் கிடைப் பதை அவசரமாகப் பற்றிக் கொள்வதுபோல் நிர்ப்பந்தம் காரணமாக ஏதேனும் ஒன்றைக் கொள்கையாகப் பற்றிக் கொள்கிறார்களே தவிர நியாயமாகச் சிந்தித்துச் செயல்படு கிற கொள்கை நிதானத்தைக் காணோம்'-என்று மனக் கொதிப்புத் தணியாமல் மேலும் ஆவேசமாக வளர்ந்தது அவன் பேச்சு.

- அவனுடைய பேச்சிலிருந்த அழுத்தமும் ஆவேசமும் துணிவின் உறுதி தொனிக்கும் குரலும் கூட்டத்தின் சல சலப்பை அடங்கச் செய்தன. யாரோ ஒருவர் நடுவில் துண்டுச் சீட்டில் கேள்வி எழுதிக் கொடுத்தனுப்பினார். கேள்வி அந்தச் சந்தர்ப்பத்திற்கோ-அப்போது அவன் பேசிக்கொண்டிருந்த பேச்சிற்கோ பொருத்தமில்லாமலிருந் ததுடன் தனிப்பட்ட முறையில் அவனை வம்புக்கு இழுப்ப தாகவும் அமைந்திருந்தது. நடிகரையும், அரசியல்வாதியை 'யும் பற்றிச் சொற்பொழிவின் தொடக்கத்தில் அவன் குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/89&oldid=590459" இலிருந்து மீள்விக்கப்பட்டது