பக்கம்:நெற்றிக்கண்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நெற்றிக் கண்

எல்லாப் படங்களையும் சேகரித்து இப்படி ஒட்டி அவன் அறையில் கொண்டு வந்து வைத்திருந்தாள். ஒரு காலத்தில் இரண்டு பேரும் ஒரே ஞாபகமாயிருந்தார்கள். இப்போது தனித்தனி ஞாபகங்களாகிவிட்டாலும் பழைய ஒருமையை மறக்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை.

எவ்வளவு வேகமாக அந்த ஞாபகங்களை வர வழைத்துக் கொள்ள முயன்றானோ அவ்வளவு வேகமாக உடனே அவற்றை மறந்து வேறெதையாவது நினைக்க வேண்டும் போல ஆற்றாமையும் வந்தது. ஆல்பத்தைத் துரக்கி வைத்து விட்டு ஏதோ புத்தகத்துடன் மறுபடி நாற்காலியில் வந்தமர்ந்தான். புத்தகத்தில் மனம் செல்ல வில்லை. எத்தனையோ பல நாட்களில் எத்தனையோ பல சமயங்களில் எழுதுவதற்காக அவன் விரும்பிய தனிமை இன்று இந்த விநாடியில் வேதனை தருவதாயிருந்தது. சொந்த நினைவுகளோடு தனியே இருக்கும் அந்த நிலையே விரோதியோடு தனியே விடப்பட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. எங்காவது வெளியே ஒடிப்போய் 'இது பெரிய உலகம்-இங்கு பயமில்லை’-என்பதுபோல் மனிதர்களோடு ஒட்டிக்கொள்ளவேண்டும் போலத் தாபமா .யிருந்தது. அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு ஏதோ தினைத்துக் கொண்டவனாகக் கடற்கரைக்குப் புறப்பட் டான் சுகுனன் .

மாநிலக் கல்லூரியருகே பைகிராப்ட்ஸ் ரோடும் கடற். கரைச் சாலையும் கலக்குமிடத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை கடலை நோக்கியபடி இருட்டில் எதையோ மெளன. மாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. மங்கிய நீல வண்ணத்தில் மேகம் நனைவதுபோல் இதமான ஒளியுடன் கடற்கரை விளக்குகள் தென்பட்டன. மணலில் இறங்கி உட்புறமாகத் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் காற்றாட நடக்கலானான் சுகுணன். கடற் காற்று உடலில்பட்டுத் தடவியதும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி ..பிறந்தது. வியாபாரமெல்லாம் முடிந்து இரவில் குடும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/98&oldid=590469" இலிருந்து மீள்விக்கப்பட்டது