பக்கம்:நெற்றிக்கண்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97

சகிதம் காரில் வந்து காற்றுவாங்கும் செளகார்பேட்டை. தங்கசாலைத் தெரு சேட்கள், செளகார்கள், கடற்கரையில் காருடனும், கைகளில் பாடும் டிரான்சிஸ்டர் ரேடியோக் களுடனும் தென்பட்டனர். ஒரு மூலையில் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் தழுவினாற்போல பாண்ட் ஸ்லாக்அணிந்த இளைஞர் ஒருவர் நடனமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவன் போய்க் கொண்டிருந்த சாலை யில் அவனுக்கு நேரெதிர்த் திசையில் அவனைக் கடந்து விரைந்த பெரிய கார் ஒன்றிலிருந்து ஒரு கணம் காற்றோடு வந்து பாய்ந்த உயர்தர செண்ட் வாசனை, மல்லிகைப்பூ. மணம், கடற்கரை மேகக் குவியலில் அடங்கித் தெரியும் சிறிய நிலவு. தொலைவில் டிரான்சிஸ்டரிலிருந்து கேட்கும் லதா மங்கேஷ்கரின் நளினமான குரல் எல்லாமாகச் சேர்ந்து ஏதோ பெரிதாகக் கற்பனை செய்ய வேண்டும்போல அவன் மனத்தைக் கிளரச் செய்தன. புகுவதற்கு உடல் கிடைக் காத ஆவியைப் போல் அந்தக் கற்பனை பேயாய் அலைந்ததே ஒழிய இன்னதென்று ஒரு வடிவில் வந்து உருவாகவில்லை. x -

நடந்து கொண்டேயிருந்தவன் - தற்செயலாக எதிரே வந்த மற்றொரு காரின் மேல் பார்வை சென்றதுமே திடுமெனத் தலை குனிந்து விலகினான். துளசியும், அவள் கணவனும் அதில் வந்து கொண்டிருந்தார்கள். துளசி: காரை டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அவள் கணவன் அருகே அமர்ந்திருந்தான். அவள் கூந்தலில் ஒரு கூடை பூச்சரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தில் எதிரே நடுச்சாலையில் தனியே நடந்துவரும் அவனை அவள் பார்த்து விட்டிருக்கவேண்டும். கார் அவனருகே. வந்து நின்றுவிடும்போல் அத்தனை மெதுவாக வேகம் குறைந்தது. சட்டென்று சாலையிலிருந்து விலகி மணலில்: இறங்கி விரைவாக இருளில் நடப்பதன் மூலம் அதைத் தவிர்த்தான் சுகுணன். அந்த நிலையில் அவன் நெஞ்சுவேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் மணலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/99&oldid=590470" இலிருந்து மீள்விக்கப்பட்டது