பக்கம்:நேசம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி109


எங்கேயோ, எப்பவோ கண்டு, கடல் கொந்தளித்து, ஒய்ந்துபோன புயலின் பிச்சம், பெருமூச்சு, எழுந்து, பல் விளக்கியதும், தோட்டத்தை ஒருமுறை கற்றிவரும் இந்தச் சடங்கு அலுத்ததேயில்லை. காப்பிகட இன்னர்தான். 'குழந்தைகளா உங்கள் இரவு எப்படிக் கழிந்தது?" என்று விசாரிக்கிற மாதிரி. அல்லது, பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை: "அகோவாரும் பிள்ளாய் மதியூக மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா? மக்கள் ஆறில் ஒருபங்கு கப்பம் கட்டு, இறார்களா?’ என்கிற மாதிரி; என்று சொல்லலாமா? ஆனால், இங்கு கேஸ் உல்ட்டா கப்பம் கட்டுவதென் ஒாம் அரசுதான். இதைத் தோட்டமாகப் பார்ப்பதற்கே ஒரு சின்ன ஆஸ்தியே செலவாச்சு என்பதை இப்போ நினைக்கையிலேயே சுருக் கென்றது. பிறந்த இடத்தின் இல்லாக் குறையின் பிசிர், எவ்வளவு தேய்த்தாலும் பாத்திரத்தில் ஒட்டிக்கொண் டிருக்கும் பூண்டு நாற்றம்போல் எப்பவுமே முற்றிலுமே கழலாதாக்கும்:

வந்தபோது பொட்டல்தான். வந்த முதல் வருடம் ஒரே காய்ச்சல், அடுத்து இரண்டு வருடங்கள் மழை. அது என்ன மாய மழையோ? ஒரு வாரம் ஒரே வெள்ளக் காடு. ஆசையோடு போட்டதெல்லாம் ஒன்று வெள்ளம் அடித்துக்கொண்டு போயிற்று. அல்லது அழுகி...பட்ட சிரமமெல்லாம் கடன். அந்த வெறுப்பில், போன வருடம் ஒன்றுமே போட வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/115&oldid=1403566" இலிருந்து மீள்விக்கப்பட்டது