பக்கம்:நேசம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122லா. ச. ராமாமிர்தம்


இருந்தது. சன்னியா ஒ பின்னால் போனவன் சாதுவாய்த் திரும்பி வந்திருப்பான் என்று எண்ணி வாலை ஆட்டிய வெளிநாட்டு எதிரிகளும், உள்நாட்டுச் சதிகாரர்களும், ஆளின் விழிப்பும் வாளும் துளிகூடக்கூர்மங்கவில்லை என்று பட்டு, உணர்ந்து அடங்கினர்.

மனைவிக்குச் சேரவேண்டிய தேகதருமங்கள், மற்ற உரிமைகள் எதிலும் வஞ்சனையில்லை.

போகும்போது விட்ட குழந்தை ஏழு வருடங்களில் ஒ றுவனாக வளர்ந்துவிட்ட தன் மகனை முறையே அடை யாளம் கண்டுகொண்டதிலும் குறைவில்லை. ஆனால் விரல் வைத்துப் பார்க்கமுடியாத ஏதோ ஒரு ஒதுக்கம் அவரிடம் இருந்தது. கடமைகள் தவறாமல் ஒழுங்காக நிறைவேற்றப் உசட்டன. ஆனால் கடமைகள்,

ஆனால் கடமையின் தன்மை, நியாயம், வரைக் கோடுகள் என்றுமே தெளிவாய்த் தெரிந்ததில்லை. நாக்கைத் தொட்டுக்கொண்டு வரைந்த கோடுகள், ஒருவனுக்கு உண்டி மற்றவனுக்கு நஞ்சு, நன்டுக்குத் திண் உாட்டம், நரிக்குக் கொண்டாட்டம், ஒன்கின கை அடிக்க ஒருவன் இருந்தே ஆகவேண்டும். ஒருவனுக்குக் கடமை எதிராளிக்குக் கொடுமை. கடமையின் கொடுமை என்கிற தலைப்பில் பழைய மேற்கோள்களைக் காட்டியே இன்று ஒரு பி.எச்.டி.க்கு வழியிருக்கிறது.

ஆகவே ராணி மனம் வெதும்பியதில் ஆச்சரியமில்லை. 'என் ஆட்சியைப் பிடுங்க இவன் யார்?' என்று அவள் கேட்கவில்லை. தாலி கட்டிய புருஷன், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், காணாமல் புருஷன் கண்டெடுத்த புருஷன், பிசிந்திருந்த வரை அவள் நெஞ்சத் தின் கள்ளப் புருஷன்-எல்லாமே அவர்தானே! படுக்கை அறையின் அந்தரங்கத்தில், "நீங்கள்தான் பைராகி பின்னால் ஓடிப் போனிர்கள். நாம் பிரிந்திருந்தவரை, நாதாt

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/128&oldid=1403580" இலிருந்து மீள்விக்கப்பட்டது